Followers

Thursday, November 9, 2017

நவ அம்மன் யாகம்


ணக்கம்!
          அம்மன் பூஜை முடிவடைந்தவுடன். நவ அம்மன் யாகம் என்ற ஒன்றை நடத்த இருக்கிறோம். நவ அம்மன் யாகம் என்பது நவ சண்டியாகத்திற்க்கு இணையானது. 

ஒன்பது நாட்கள் செய்யப்படும் இந்த யாகம் வாழ்வில் ஏற்படும் எப்பேர்பட்ட பிரச்சினைகளையும் மற்றும் நாம் வாங்கும் சாபம் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவம் எல்லாவற்றையும் நீக்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்கும்.

இதனை கோவில்களில் நவசண்டியாகம் என்று செய்வார்கள். பெரிய கோவில்களிலேயே இதனை மூன்று தினங்கள் மட்டும் செய்வார்கள். ஒன்பது நாட்கள் நடத்துவது மிக மிக குறைவு. பெரிய பொருட்செலவில் இதனை நடத்தவேண்டும் என்பதால் இதனை மூன்று நாட்களில் நடத்தி முடித்துவிடுவார்கள்.

நான் பார்த்த வரையில் கோவில்களில் கடைசி நாள் மட்டும் சண்டிக்கு என்று யாகம் செய்கின்றனர் மற்ற நாட்களில் விநாயகர் மற்றும் மற்ற தெய்வங்களுக்கு யாகம் செய்கின்றனர். நாம் அப்படி செய்யாமல் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு என்றே செய்ய இருக்கிறோம்.

பெரியளவில் தொழில் செய்பவர்கள் மற்றும் பணக்காரர்கள் அனைவரும் இதனை செய்கின்றனர். வருடத்திற்க்கு ஒரு முறை இதனை செய்கின்றனர். அவர்களுக்கு வரும் சாபத்தை போக்க இதனை செய்வார்கள் ஆனால் அனைவரும் செய்யவேண்டும் என்பது தான் உண்மை.

நாம் ஒன்பது நாட்கள் இதனை செய்ய இருக்கிறோம். நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் மற்றும் சிங்கபூரை சேர்ந்த திரு மயிலப்பன் அவர்கள் இதனை செய்வதற்க்கு உதவினார்கள்.

வெளி இடங்களில் லட்சக்கணக்கில் இதனை வாங்கிக்கொண்டு செய்வார்கள் அப்படி இல்லாமல் இதனை  மிக குறைந்த விலையில் செய்ய இருக்கிறோம். உங்களால் கொடுக்கும் முடியும் ஒரு கட்டணம் தான் இதற்கு என்று வைத்திருக்கிறோம். ஒன்பது நாட்கள் ஒருவருக்கு என்று இதனை செய்யும்பொழுது கண்டிப்பாக அதிகபடியான நன்மைகளை பெறமுடியும் என்பதையும் இந்த நேரத்தில் சொல்லுகிறேன்.  கண்டிப்பாக எப்படியும் நாம் செய்யவேண்டும் என்று நினையுங்கள். உங்களுக்கான வாய்ப்பு அதுவாகவே அமையும். 

சுக்கிரனால் ஏற்படும் சாபத்திற்க்கு இந்த யாகத்தை செய்துக்கொள்ளலாம். தேவையானவர்கள் என்னை தொடர்புக்கொண்டு இதனைப்பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.

நவ அம்மன் யாகம் தொடங்கும் தேதியை பதிவில் சொல்லுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: