வணக்கம்!
நேற்று காலையில் நவ அம்மன் யாகத்தை முடித்துவிட்டு தஞ்சாவூர் சென்றேன். தஞ்சாவூரில் ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்யவேண்டும் என்று சென்றேன். முதலில் தஞ்சாவூர் இரயில் நிலையத்திற்க்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தோம். அதன் பிறகு நண்பர் மூலஆஞ்சநேயரையும் தரிசனம் செய்துவிடலாம் என்றார். உடனே அங்கும் சென்றோம்.
தஞ்சாவூரில் இராஜவீதியில் உள்ள மேலவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் மூலையில் மூலை ஆஞ்சநேயர் கோவில் அமைந்திருக்கிறது. பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற பெயர் தான் அதற்கு ஆனால் மூலையில் அமைந்த காரணத்தால் மூலை ஆஞ்சநேயர் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். மிகவும் பழமையான கோவில்.
மேலவீதியில் தொடர்ச்சியாக நிறைய கோவில்கள் இருக்கும். நேரம் இருந்திருந்தால் அனைத்தையும் தரிசனம் செய்திருக்கலாம். மாலை நேரத்தில் சென்ற காரணத்தால் ஆஞ்சநேயரை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.
மிகவும் பழமையான கோவில் என்பது இந்த கோவிலைப்பார்த்தாலே உங்களுக்கு தெரியும். தஞ்சாவூர் வரும்பொழுது இந்த கோவிலையும் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். இந்த ஆஞ்சநேயர் கிரகங்களோடு அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்பது அங்கு சென்றால் உங்களுக்கு புரியும்.
தாயின் மடியில் அமர்ந்திருக்கும் அனுமன் புகழ் பெற்றது. ஆயிரம் வருடம் பழமையான கோவில் என்பார்கள். 12 இராசி மண்டல சிற்பமும் இருக்கின்றது. தஞ்சாவூர் வரும்பொழுது ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment