Followers

Thursday, November 2, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவர் நல்ல வெள்ளை வேஷ்டி கண்டிக்கொண்டு ஆள் பார்க்க நன்றாக இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவரோடு ஒரு சாதாரணமான ஒருவர் எளிதில் பழகிவிடமுடியுமா கொஞ்சம் தயங்கி தான் செல்லவேண்டும்.

சுக்கிரன் அப்படிப்பட்ட ஒன்று தான். சுக்கிரன் என்றாலே அது ராஜாவாக இருக்ககூடிய ஒன்றை காட்டுகிறது. சுக்கிரனின் காரத்துவத்தில் இதனை சொல்லுவார்கள். நாட்டின் அரசனுக்கு நெருங்கிய ஆள் என்று சொல்லுவார்கள்.

அரசனுக்கு வேண்டப்பட்டவன் எப்படி இருப்பான். அவனும் அரசனை போல தான் இருப்பான். இவர்களோடு நாம் பழகவேண்டும் என்றால் அவர்கள் போல நாமும் ஆடைகளை உடுத்தவேண்டும். அவர்கள் போல இல்லை என்றாலும் ஒரளவு வசதி வாய்ப்பு இருந்தால் நம்மை அவர்கள் கவனிப்பார்கள்.

மேலே சொன்னவர்களோடு நாம் இணையவேண்டும் என்று சொல்லுவது சுக்கிரனோடு நாம் அவ்வளவு எளிதில் இணைந்துவிடமுடியாது என்பதற்க்காக சொன்னேன். நீங்கள் இணைவதற்கு குறைந்தபட்ச தகுதியாவது இருந்தால் கண்டிப்பாக இணைந்துவிடலாம்.

கெட்டவனோடு நாம் இணைந்தால் கெட்டவன் குணம் நமக்கு வரும் என்பார்கள் அல்லவா. சுக்கிரன் காரத்துவம் உடைய ஆட்களோடு நாம் இணைந்தால் சுக்கிரனின் காரத்துவம் நமக்கும் கிடைக்கும். இது ஒரு சுக்கிரனுக்குரிய பரிகாரம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: