வணக்கம்!
ஜாதக கதம்பத்தை படிக்கும் நபர்கள் தங்களின் பெற்றோர்க்கு செய்யவேண்டிய கடமையை நீங்கள் செய்துவீட்டீர்களா என்று ஒரு கேள்வியை இன்று வைக்கவேண்டும் என்று நினைத்து இந்த பதிவை தருகிறேன்.
தன்னுடைய பெற்றோர்களை கவனித்தால் மட்டும் போதாது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமை என்று ஒன்று இருக்கின்றது அதனை நீங்கள் செய்யவேண்டும். இந்த காலத்தில் பெற்றோர்களை தனியாக விட்டுவிட்டு அவர்களுக்கு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வெளியில் சென்றவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். பெற்றோர்களோடு இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவு பயன்படும்.
முன்கூட்டியே ஒன்றை சொல்லிவிடுகிறேன். இதுவரை நான் இதனை செய்யவில்லை நான் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு சொல்லவேண்டும் அதன் வழியாக நீங்கள் பயன்பெறவேண்டும் என்று சொல்லுகிறேன்.
உங்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்து வைக்கவேண்டிய அறுபதாம் கல்யாணம் என்று சொல்லபடுகின்ற சஷ்டியபூர்த்தியை தான் சொல்லுகிறேன். ஒவ்வொரு மனிதனும் அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டால் ஒரு மனிதனின் வாழ்நாளில் பாதிகாலத்தை முடித்துவிடுகிறான் என்பதால் அதற்கு செய்யவேண்டிய ஒரு நிகழ்வு தான் இந்த அறுபதாம் கல்யாணம்.
சோதிடத்தில் ஒரு மனிதனுக்கு நூற்றிருபது வருடங்கள் என்று சொல்லுகின்றன. அதில் பாதியை வாழ்ந்தாலே அதற்கு செய்யபடுகின்ற ஒரு நிகழ்ச்சி தான் இந்த சஷ்டிபூர்த்தி. இதற்கு பிறகு வரும் நாட்கள் எல்லாம் அவர்கள் செய்த புண்ணியத்தால் வருகின்ற ஒரு நிகழ்வு.
அறுபதாம் திருமணத்தை பெரும்பாலும் திருகடையூர் அமிர்தகடேஸ்வரர் திருகோவிலில் நடத்துவார்கள். அங்கேயே நீங்களும் நடத்தி வையுங்கள். சொர்க்கத்தை உங்களின் பெற்றோர்களுக்கு கொடுக்கவேண்டும் வேண்டும் என்றால் நீங்கள் செய்யவேண்டிய ஒன்று உங்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் செய்யும் அறுபதாம் கல்யாணம் மட்டுமே. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்கு அமையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment