வணக்கம்!
உங்களின் ஜாதகத்தில் உள்ள அடிப்பட்ட கிரகங்களை எடுத்து அது எந்த சக்தியை வழங்குகிறதோ அந்த சக்தி உங்களின் உடலில் பற்றாக்குறையில் இருக்கும். அடிப்பட்ட கிரகத்தின் சக்தி உங்களின் உடலில் இருக்காது.
நாம் பரிகாரத்தை வெளியில் செய்துக்கொண்டு இருப்போம். உள்ளே மாற்றம் நடைபெறும்பொழுது மட்டுமே அது வெளியில் செய்யப்படும் பரிகாரத்தின் சக்தியோடு இணைந்து பயணித்து உங்களுக்கு மாற்றத்தை தரும்.
மனிதஉடலில் அடிப்படை காமசக்தி. காமசக்தி இல்லை என்றால் அது பலவித பிரச்சினைகளை உங்களின் உடலுக்கு கொடுத்துவிடும். சுக்கிரன் காமசக்திக்கு காரத்துவம் வகிக்கிறார். சுக்கிரன் பாதிக்கப்பட்ட ஆட்கள் பெரும்பாலும் காமசக்தி குறையவுடையவராக இருப்பார்கள்.
இளைஞர்களாக இருந்தால் நம்மிடம் நிறைய காமச்சக்தி இருக்கின்றது அதனால் நமக்கு சுக்கிரன் நன்றாக இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கவேண்டாம். பத்து தடவை போனபிறகு தான் உங்களின் காமசக்தியின் அளவு என்ன என்று தெரியும்.
திருமணம் ஆன பிறகும் காமசக்தி நன்றாகவே இருக்கின்றது எந்த வித பிரச்சினையும் இல்லை என்று உங்களுக்கு தோன்றினால் உங்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல பலனை கொடுக்கிறது என்று அர்த்தம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் 90 சதவீதம் பேர் இந்த சக்தி குறையுடையவராக தான் இருப்பார்கள்.
காமசக்தி குறைவு என்பது இருக்கின்றது என்று நினைத்தால் உடலுக்கு தேவையான சக்தி ஏற்றும் வழிகளை பின்பற்றுங்கள். பிறகு பரிகாரம் இதற்கு செய்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment