வணக்கம்!
சுக்கிரனுக்கு பரிகாரம் செய்துக்கொடுங்கள் என்று தினமும் நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்கின்றனர். அனைவரையும் பொறுமையாக இருங்கள் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். கோச்சாரப்படி பிரச்சினை இருந்தால் இன்றோடு முடிவடைந்துவிடும்.
பொதுவாக சுக்கிரனுக்கு பரிகாரம் செய்வது என்பது கொஞ்சம் கடினமான ஒரு வேலை ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் அதிவேகத்தில் செல்லக்கூடிய கிரகங்களுக்கு பரிகாரம் செய்வது என்பது சாமானியப்பட்ட ஒன்று கிடையாது.
பொறுமையாக செல்லும் கிரகங்களுக்கு எளிதில் நாம் பரிகாரம் செய்துவிடலாம். அவசரமாக செல்லும் கிரகங்களுக்கு பரிகாரம் செய்வது கொஞ்சம் கடினமான ஒரு வேலையாக இருக்கும்.
சுக்கிரனின் தசா ஒருவருக்கு சென்றுக்கொண்டு இருந்தால் அவர்களை வருடத்திற்க்கு ஒரு முறை பரிகாரம் செய்ய சொல்லி அதனை செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். ஏன் என்றால் அப்பொழுது தான் சுக்கிரனின் தீயகுணங்களை போக்கி நல்ல பலனை கொடுக்க வைக்க முடியும்.
கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுக்கு எல்லாம் சுக்கிரனுக்கு பரிகாரம் செய்யலாம். அது அவர் அவர்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு முடிவு செய்யவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment