வணக்கம்!
சளி தொல்லை இருப்பவர்களுக்கு நெய் ஆகாதே என்ன செய்யலாம் என்று நண்பர் KJ அவர்கள் கேட்டார்.
சளி தொல்லை இருப்பவர்களுக்கு நெய் ஆகாது என்றால் ஹோமம் நடைபெறும் இடங்களில் சென்று அமர்ந்துவிட்டு வரலாம். நெய் வாசம் உங்களின் மேல் பட பட சளி தொல்லையும் நீங்கும். உங்களுக்கும் நல்லது நடக்க ஆரம்பிக்கும்.
இதில் எனது சொந்த அனுபவமே இருக்கின்றது. எனக்கே சளி தொல்லை இருந்துக்கொண்டு தான் இருந்தது. அது எல்லாம் படிப்படியாக ஹோமத்தில் அமரும்பொழுது விலகிவிட்டது. நீங்களும் இதனை செய்யலாம்.
சளி தொல்லை என்றால் நல்ல மருத்துவம் தற்பொழுது இருக்கின்றது அதனை செய்துக்கொள்ளுவது நல்லது. சளி தொல்லை கிடையாது. சனியால் வரும் தொல்லையாகவே அது இருக்கும்.
இதனை செய்யமுடியவில்லை என்றால் சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்ற அடுத்த வேலையை செய்துக்கொள்ளுங்கள். ஒன்று இல்லை என்றால் அடுத்த ஒன்று என்று எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
Thank you sir. I have Dust Allurgy for Past 25 Years. Not getting Permanent Solution. Will try to Sit in Homam here after. Once again Thank you sir.
Sir, Can we use/pour ghee in sambarani cups/thobam used during our daily poojas at home. Will it give positive effect for us. Because attending homams for common people is rarely possible. If my question is not correct, i apologize.
- A.Kannan
Post a Comment