வணக்கம்!
எனது முன்னோர்கள் எங்களின் குலதெய்வத்திற்க்கு அசைவ உணவை படைத்து வழிபட்டு வந்தார்கள். நாங்களும் அதனையே பின்பற்றி வரவேண்டுமா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார்.
குலதெய்வத்திற்க்கு உங்களின் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதனையே பின்பற்றி வரவேண்டும். அதோடு அவர்கள் என்ன மாதிரியான அசைவ உணவை தயாரித்து அதற்க்கு பரிமாரினார்கள் என்பதையும் கவனித்து அதனை செய்துவரவேண்டும்.
ஒரு சில இடத்தில் கீரை கருவாட்டு குழம்பு செய்து படைப்பார்கள். ஒரு சில இடத்தில் மட்டன் குழம்பு வைத்து அதனை சோற்றில் உருட்டி படைத்துவிட்டு அதனை சாப்பிடுவார்கள். ஒரு சில இடத்தில் நாட்டுக்கோழி முட்டை வைத்து சாமி கும்பிடுவார்கள்.
தற்பொழுது உள்ள மாற்றம் குலதெய்வத்திடமும் கொண்டு வரவேண்டியதில்லை. என்ன தான் நவநாகரீகம் வந்தாலும் மனிதன் குலதெய்வத்திடம் மாற்றத்தை செய்யவேண்டாம். எப்படி உங்களின் முன்னோர்கள் இருந்து செய்தார்களோ அதுபோலவே செய்யுங்கள்.
ஒவ்வொரு வருடமும் உங்களின் குலதெய்வ பூஜையின் பொழுது செய்வது போல உங்களின் மாதந்தோறும் நடைபெறும் பச்சைப்பரப்புதலிலும் செய்யலாம். குலதெய்வம் நன்றாக உங்களுக்கு வாரி வழங்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment