வணக்கம்!
நம்மை நன்றாக உற்றுகவனிக்கும்பொழுது தான் இந்த இயற்கையை நாம் கவனிக்க ஆரம்பிப்போம். பொதுவாக ஒவ்வொரு திதியையும் எடுத்துக்கொண்டு கவனித்தால் எது சரியில்லாத திதியோ அந்த திதியில் உங்களின் மனநிலையும் சரியில்லாத ஒரு நிலையில் இருக்கும்.
நாம் நம்மை அதிகம் கவனிப்பதில்லை அந்த காரணத்தில் தான் இந்த திதிகளை எல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அஷ்டமி நவமி அமாவாசை மற்றும் பெளர்ணமி திதிகளிலும் அந்த திதிகளுக்கு தகுந்த மாதிரி மனநிலையில் மாற்றம் இருக்கும்.
ஒரு சில நல்ல திதிகளில் நல்ல மனநிலை இயற்கையாகவே நமது மனதிற்க்கு வருகின்றது. அந்த திதிகளில் நாம் செய்கின்ற காரியம் அனைத்தும் வெற்றியாகவே வந்துவிடும். நல்ல திதிகள் இல்லாத நாளில் நாம் செய்கின்ற காரியம் தோல்வியை தந்துவிடும்.
எது தீமை தரும் திதி என்று எழுதி வைத்திருக்கின்றார்களோ அந்த நாளில் நம்மை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த சொல்லிருப்பார்கள். அந்த நாளில் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு வந்துவிடவேண்டும்.
பொதுவாக ஜாதக பலனை சொல்லும் நபர்கள் இந்த திதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும். திதி பலனும் நல்ல பலனை துல்லியமாக கொடுக்க வழி வகுக்கும். ஒரு சில நட்சத்திரங்கள் ஒரு சில திதிகளில் நன்றாக வேலை செய்யாது.
எடுத்துகாட்டாக ரோகிணி நட்சத்திரம் உடையவர்கள் பெளர்ணமி அன்று பிறந்தால் அவர்களுக்கு நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு திதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொல்லுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment