வணக்கம்!
கண்திருஷ்டியைபற்றி பார்த்தோம். இதில் பல கேள்விகள் உங்களுக்குள் வரும். பிறமதத்தில் உள்ளவர்கள் கண்திருஷ்டியை போடுகின்றார்களா என்ற கேள்வி தான். கண்திருஷ்டி ஏதாவது ஒரு வகையில் அனைத்து மதத்தினரும் செய்துக்கொண்டு தான் வருவார்கள்.
கண்திருஷ்டி என்பது ஒவ்வொரு மனிதரும் போட்டால் நல்லது தான். நமது சூட்சமஉடலை பாதுகாக்கும் ஒரு அம்சமாக அது இருக்கின்றது. சூட்சமஉடலை பாதுகாக்கும் பொழுது நமக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகிவிடும்.
கண்திருஷ்டி போடவில்லை என்றாலும் நீங்கள் அடிக்கடி கோவில்களுக்கு சென்று புனித நீராடினால் அது உங்களை நன்றாக காக்கும். கடலில் குளித்தால் கூட அது சூட்சமஉடலை பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும்.
வருடம் ஒரு முறை கண்திருஷ்டியை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன். இதனை அடிக்கடி சொல்லுவதற்க்கு காரணம் இதில் அதிகம் நன்மை இருப்பதால் தான் சொல்லுகிறேன்.
தவிர்க்க இயலாத காரணத்தால் அம்மன் பூஜை நடத்தபடவில்லை. வரும் வாரத்தில் அம்மன் பூஜை செய்யப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment