Followers

Thursday, February 1, 2018

சமாதானம்


ணக்கம்!   
          பிறமதத்தில் சமாதானம் என்ற வார்த்தையை அதிகமாக சொல்லுவார்கள். அவர்கள் வாயில் அதனை சொல்லுவார்கள். நம்ம ஆட்கள் அந்த சமாதானத்திற்க்கு ஒரு விருந்தை வைத்து சமாதானம் ஆகிவிடுவார்கள்.

ஒருவரோடு சண்டைப்போட்டுக்கொண்டு அவரோடு பேசமால் இருந்தால் இந்த சமாதானம் வார்த்தை அவர்களோடு பேசவைக்கும் என்று அனைத்து மதத்திலும் ஒரு கருத்தாக வைப்பார்கள். சர்ச்சில் நடைபெறும் கூட்டத்தில் இந்த வார்த்தையை சொல்லி உங்களின் அருகில் இருப்பரோடு சமாதானம் ஆகிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவார்கள்.

நம்ம ஆளுங்க இதனை செய்வது ஒரு கோவிலில் அன்னதானம் அல்லது ஏதாவது ஒரு விழாவாக வைத்து எதிராளி கூப்பிட்டு அவர்களுக்கு அன்னதானம் செய்ய சொல்லுவார்கள். விருந்துக்கு வந்து சமாதானம் ஆகிவிடுவார்கள்.

வருடத்திற்க்கு ஒரு முறை நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் ஏதாவது ஒரு விழா ஏற்பாடு செய்து நீங்களே உங்களோடு சண்டைப்போட்டவர்களை கூப்பிட்டு சமாதானம் ஆகிவிடுவது நல்லது.

மனிதர்களுக்கு எதிராளி இருக்ககூடாது அவர்கள் மனதில் விழையும் வன்மம் உங்களை தாக்கும் என்பதால் இதனை செய்யவேண்டும். உங்களோடு சண்டைப்போட்டுக்கொண்டு அவர் தனியாக சென்றால் கூட அவர்களின் மனதில் ஒரு தீய எண்ணம் இருப்பதால் அது உங்களை வந்து தாக்கும் என்பதால் அவர்களை கூப்பிட்டு சமாதானம் ஆகிவிடலாம்.

நம்மால் விருந்து எல்லாம் இந்த அவசரஉலகத்தில் வைக்கமுடியாது என்றால் அவர்களோடு போனில் பேசி சமாதானம் ஆகிவிடலாம். நீங்களே ஈகோவை விட்டுவிட்டு அவர்களோடு பேசிவிடுங்கள்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309
What'sApp Number: 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: