Followers

Thursday, February 15, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
         ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதனைப்பற்றி பார்த்தோம். ராசி நாதன் என்பது ஒரு மிக முக்கியபங்கு வகிக்ககூடிய ஒன்று என்பது உங்களுக்கு தெரியும். ஒருத்தரை நாம் பார்த்தவுடன் சோதிடம் சம்பந்தமாக நாம் பேசினால் என்ன கேட்போம். உங்களின் ராசி என்ன என்பதை தான் முதலில் கேட்போம்.

ராசியைப்பற்றி நாம் கேட்ட பிறகு தான் அடுத்தது நட்சத்திரம் என்ன என்பதைப்பற்றி கேட்போம். நட்சத்திரம் போல் ராசியும் மிக மிக முக்கியபங்கு வகிக்கின்றது. ஒரு நல்ல சோதிடராக இருக்கவேண்டும் என்றால் இராசியைப்பற்றி தெரிந்தவுடன் இவர் இப்படி தான் இருப்பார் என்பதை துல்லியமாக நமக்கு தெரியவேண்டும்.

ராசி என்ன என்றவுடன் ஒருவரின் முழுவாழ்க்கையும் அப்படியே நமக்கு தெரிந்துவிடும். சோதிடத்தை தொழிலாக கொண்டவர்கள் அனைவருக்கும் ராசியை சொன்னவுடன் அவர்கள் பலனை சொல்லிவிடுவார்கள். அதற்கு பிறகு தான் அடுத்ததைப்பற்றி பார்த்து பலனை சொல்லுவார்கள்.

ராசியைப்பற்றி ஏன் சொல்லுகிறேன் என்றால் மனிதன் மனதை வைத்து வாழ்பவன். மனதை தெரிந்துக்கொண்டுவிட்டால் அவனின் செயல்பாட்டை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளமுடியும். நாம் சொல்லும் பலனும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

ராசியை வைத்து நாம் என்ன செய்யபோகிறோம் என்பதை பார்க்கலாம். நாம் கோவிலில் அர்ச்சனை செய்வதற்க்கு நட்சத்திரத்தை பயன்படுத்துவோம். நமக்கு வரும் இடர்பாடு எல்லாம் நமது மனதால் வருபவை. மனதால் வருவதை சரி செய்தால் நமக்கு பிரச்சனை வராது. ஏற்கனவே வந்த பிரச்சினையும் போய்விடும்.

உங்களுக்கு பிரச்சினை வரும்பொழுத எல்லாம் அருகில் இருக்கும் கோவிலில் நவகிரக சந்நிதியில் உங்களின் ராசி நாதன் யார் என்பதை அறிந்துக்கொண்டு அவர்க்கு ஒரு தீபம் ஏற்றி ஒரு அர்ச்சனை செய்தால் போதும். அந்த நேரத்தில் உள்ள பிரச்சினை படிப்படியாக குறைந்துவிடும்.

நாட்களை எல்லாம் பார்க்கவேண்டாம். உங்களுக்கு என்றைக்கு பிரச்சினை வருகின்றதோ அன்று சென்று இந்த விசயத்தை செய்தால் போதுமானது. உங்களின் வாழ்க்கை முழுவதும் எப்பொழுது எல்லாம் பிரச்சினை வருகின்றதோ அன்று இதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: