வணக்கம்!
ஏழரை சனி,ராகு கேது தசா,சுக்கிர தசா மற்றும் சனி தசா காலங்களில் ஒருவருக்கு சளி தொல்லை அதிகமாக இருக்கும். உடல்நிலையிலும் பிரச்சினை அதிகமாக வரும். இதற்கு அதிகம் காரணமாக இருப்பது அவர்களின் உணவுமுறையும் ஒரு காரணமாக அமைகிறது.
பெரும்பாலும் இந்த காலக்கட்டங்களில் இஷ்டத்திற்க்கு சாப்பாடு சாப்பிடாமல் கொஞ்சம் நிதானமாக அனைத்து உணவுகளையும் எடுத்துக்கொண்டால் நல்லது. அதோடு கசப்பு மற்றும் உவர்பு தன்மையில் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
வாரத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேப்பிலை இலை எடுத்து அப்படியே சாப்பிட்டால் நல்லது. வேப்பிலை இலையை உணவாக எடுத்துக்கொள்ளும் விரத முறை கூட ஒரு சில வழிபாட்டு மன்றங்களில் இருக்கின்றது.
இந்த காலக்கட்டங்களில் நான் வருடத்திற்க்கு ஒரு முறை பரிகாரம் செய்யவேண்டும் என்று பலரிடம் சொல்லுவது உண்டு. சோதிடகாரன் ஏமாற்றுவான் அவன் சொல்லுவதை எல்லாம் நம்பகூடாது என்ற மனநிலையில் சோதிடம் பார்த்தால் இதனை எல்லாம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் சொல்லுவதை சொல்லவேண்டும் என்று சொல்லிவிடுவது உண்டு.
மேலே சொன்ன காலக்கட்டங்களில் பரிகாரம் செய்யாமல் இருந்தால் கூட உணவு விசயங்களில் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்படுங்கள் அப்படி இல்லை என்றால் பெரியளவில் உங்களுக்கு செலவை வைத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment