வணக்கம்!
கடன் என்ற ஒன்று வாழ்வில் மிகப்பெரிய மோசமான ஒரு நிலையை அனைவருக்கும் ஏற்படுத்தும். ஜாதகத்தில் நாம் கடனுக்கு ஆறாவது வீட்டை வைத்து சொல்லுகிறோம் ஆனால் அனைத்து வீடுகளும் இதற்கு துணை போகின்றன என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு வீடு வாங்கவேண்டும் என்றால் கடன் வாங்கி வீடு வாங்குவோம். வீட்டை குறிப்பது நான்காவது வீடு. நான்காவது வீடும் இதற்கு துணை போகின்றதால் ஆறாவது வீடு மட்டும் இல்லாமல் அனைத்து வீடுகளும் இதற்கு துணை போகின்றன என்று சொன்னேன்.
கடன் ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்துக்கின்றது என்று சொல்லுவதற்க்கு காரணம் கடன் வாங்கிவிட்டால் உங்களுக்கு பலவிதத்திலும் தடைகளை கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் என்பதையே இல்லாமல் செய்துவிடுகின்றது.
கடன் எப்படி வாங்குவதில் நாம் நிறைய தவறு செய்கிறோம் என்பது தெரிகிறது. கடன் கொடுக்கும் நபர்களின் எண்ணம் நம்மை அழிக்கும் என்பது அனைவருக்கும் புரிவதில்லை. ஒரு பொருளை அடமானமாக வைத்து நாம் கடன் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். கடன் கொடுப்பவர் இதனை இவன் திருப்பவே கூடாது என்று தான் அவர் நினைத்து கடனை கொடுக்கிறார். அவரின் மனஎண்ணம் நம்மீது விழும்பொழுது நம்மால் கொடுக்கவே முடியாது.
மனிதர்கள் மட்டும் அல்ல. வங்கிகளின் எண்ணமும் இப்படி தான் இருக்கின்றது இவன் இதனை கட்டவே கூடாது என்று தான் செயல்படுகின்றனர். கடன் கொடுப்பவர்களின் எண்ணம் இப்படி இருந்தால் உங்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இருக்காது.
நமக்கு அவசியம் என்பது ஏற்படும் நிலையில் உங்களுக்கு தெரிந்த நல்ல நண்பர்களிடம் கடன் வாங்கலாம். உங்களால் திருப்பிகொடுக்க முடியாத நிலையிலும் அவர்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்றால் இவன் பிழைக்கவேண்டும் என்று இருக்கும். உங்களுக்கு பணம் வரும்பொழுது திருப்பிக்கொடுத்துவிடலாம்.
வங்கியாக இருந்தாலும் சரி வட்டிக்கு கடன் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் மாட்டாமல் இருந்தால் எப்படியும் முன்னேற்றம் அடைந்துவிடலாம். கொஞ்ச கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை கடன் வாங்காமல் முன்னேற்ற பாதைக்கு செல்ல பாருங்கள்.
கடன் கொடுப்பவர் நம்மை கணிக்க ஆரம்பித்துவிட்டால் நம்மால் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அடையவே முடியாது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். கடன் இல்லா வாழ்வை வாழஆரம்பித்தால் அதுவே பெரிய வெற்றி.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment