Followers

Monday, February 5, 2018

ஜாதக அனுபவம்


ணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் முதலில் நாம் பார்ப்பது சந்திரனை தான் அதன்பிறகு தான் அனைத்து கிரகத்தையும் பார்ப்போம். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் செல்கின்றது. எந்த ராசி என்பதை சந்திரனை வைத்து நாம் தெரிந்துக்கொள்வோம்.

வளர்பிறை சந்திரனாக இருக்கின்றதா அல்லது தேய்பிறை சந்திரனாக இருக்கின்றதா என்பதை பார்த்து அவர்களின் பலனை சொல்லலாம். வளர்பிறை சந்திரனாக இருந்தால் ஜாதகர்களின் வளர்ச்சி வளர்ந்துக்கொண்டே போகும் என்பார்கள். தேய்பிறை சந்திரனாக இருந்தால் அது வாழ்க்கையை தேய்த்துக்கொண்டே செல்லும் என்பார்கள்.

இதனை மாற்றியும் நாம் கணிக்கலாம். மாதத்திற்க்கு 15 நாள்கள் நன்றாக இருக்கும் என்றும் சொல்லுவார் மீதி 15 நாள்கள் சரியில்லை என்றும் நாம் கணித்துக்கொள்ளலாம். வளர்பிறையில் பிறந்தால் வளர்பிறையில் நன்றாக இருக்கும் என்றும் தேய்பிறையில் பிறந்தால் தேய்பிறையில் நன்றாக இருக்கும் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அமாவாசையில் பிறந்தால் அவர்களுக்கும் வளர்பிறை சந்திரனாக ஒரு சிலர் கணக்கெடுத்துக்கொள்வார்கள். பெளர்ணமி அன்று பிறந்தால் இரண்டும் நன்றாகவே இருக்கும் என்றும் சொல்லலாம். 

ஜாதகத்தில் சந்திரன் எந்த ராசியில் அமர்ந்திருக்கின்றதை பார்த்து ராசியின் குணநலன்களை வைத்து அந்த குணநலன்களோடு அவர் இருப்பார் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளலாம். ராசியை வைத்தே சோதிடபலனை சொல்லுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

ஜாதகத்தில் சந்திரன் எங்கு அமர்ந்தாலும் மறைவுஸ்தானத்தில் மட்டும் சந்திரன் சென்று அமர்ந்துவிடகூடாது. பெரும்பாலான ஜாதகர்களை நான் கவனித்து பார்த்து இருக்கின்றேன். அவர்களின் வாழ்க்கை நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது.

மறைவுஸ்தானத்தில் சந்திரன் ஏறும்பொழுது அவர்கள் ஒரு வேலைக்கு பலமுறை முயற்சி செய்து அவர்கள் வெற்றி வாய்ப்பை பெறவேண்டும். ஒரு தடவையில் வெற்றி பெற்றுவிடமாட்டார்கள். பல தடவை முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.

மறைவுஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் இருந்த ராசியினர் ஒரு ஆன்மீகவாதியின் துணையோடு காரியங்களை சாதித்துக்கொள்ளவேண்டியது தான் இதற்கு பரிகாரமாக சொல்லப்படும். பலமுறை அவர்களே முயற்சி செய்து காரியங்களை சாதித்துக்கொள்கிறேன் என்றாலும் செய்துக்கொள்ளலாம்.

சந்திரனுக்கு எந்த கிரகத்தின் பார்வை படுகின்றது என்பதை அடுத்ததாக பார்த்து முடிவு செய்யவேண்டும். தீயகிரகத்தின் பார்வையில் சந்திரன் இருக்கின்றதா அல்லது நல்ல கிரகத்தின் பார்வையில் சந்திரன் இருக்கின்றதா என்பதை பார்த்து முடிவு செய்துக்கொண்டால் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை தெளிவாக நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஒரு ஜாதகர் உங்களிடம் வந்து அவர்களின் பார்வையில் அவர் பேசுவார். நான் நல்லவன் எனக்கு பிரச்சினை வருகின்றது. நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை எனக்கு இந்த பிரச்சினை வந்துவிட்டது என்பார். இவர்கள் சொல்வதை வைத்து நாம் ஜாதகர்க்கு பரிகாரம் சொன்னால் கண்டிப்பாக பலனும் தோற்றுவிடும் பரிகாரமும் தோற்றுவிடும்.

உண்மை என்ன என்பது அவரின் மனநிலை எப்படி வேலை செய்யும் என்பதை பார்த்து தான் நாம் முடிவு செய்யமுடியும். மனநிலை எப்படி இருக்கின்றது என்பதை சந்திரனை வைத்து தான் முடிவு செய்யவேண்டும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: