வணக்கம்!
நேற்று ஒரு விசயத்தை பார்த்தோம் அதனை பிரதிபலிக்கும் விதமாக இந்த பதிவை தரவேண்டும் என்று இதனை எழுதுகிறேன். காவி உடை, தாடி, நெற்றியில் திலகம் என்று ஒரு ஆன்மீகவாதி காட்சி தருவார்கள். இது எதுவும் இல்லாமல் இத்தனை வருடங்கள் ஆன்மீகத்தில் இருந்தது கடவுள் எனக்கு கொடுத்தது ஒரு வரப்பிரசாதம் இந்த ஆன்மீக வாழ்வு.
நான் செய்யும் ஹோமத்தில் மட்டுமே காவி வேஷ்டி கட்டுவேன். மற்றபடி எந்த நேரத்திலும் ஆன்மீகத்தின் அடையாளம் என்னிடம் இருக்கவே இருக்காது. இதனை பல வருடங்களாக இப்படியே தான் பின்பற்றி வருகிறேன்.
வெளிவேஷம் போடக்கூடாது என்று எனக்குள் இருந்த ஒரு மன வைராக்கியத்தால் இதனை செய்யாமல் இருந்து வந்தேன். நெட்டில் தான் எழுதுகிறோம் இது தேவையில்லை என்று சொல்லிவிடமுடியாது. ஏன் என்றால் தினமும் என்னை வந்து சந்திப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.
முதன் முதலாக என்னை வந்து சந்தித்தவர்கள் அனைவரும் சொல்லும் சொல் நான் வேறு மாதிரி உங்களை எதிர்பார்த்தேன் என்பார்கள். இப்படி தான் இருப்பார்கள் என்று ஏற்கனவே தயார் செய்த மனநிலையில் இருந்த காரணத்தால் அவர்கள் அப்படி கேட்கிறார்கள்.
உடுத்தும் உடைகள் வெளியில் உள்ள மக்களை கவர்வதற்க்காக மட்டும் இருந்தால் உடைகளை ஆன்மீகத்தில் இருக்கின்ற மாதிரி உடுத்தலாம். நாம் மனிதனின் ஆத்மாவை ஈர்க்கும் விதத்தில் செயல்படுவதால் இதனை தவிர்த்து இருக்கிறேன்.
காவி உடை உடுத்தினால் அதற்க்கு என்று ஒரு சக்தி இருக்கின்றது அதனை மிகச்சரியாக அணியவேண்டும். எந்த நேரத்தில் நமக்கு தேவைப்படுகின்றது என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தார்போல் செயல்பட்டால் மிகவும் நல்லதாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment