Followers

Tuesday, February 27, 2018

தீர்வு


ணக்கம்!
          நேற்றைய பதிவில் சொல்லிருந்த கருத்தை படித்துவிட்டு பலர் எனக்கும் அப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லிருந்தனர். கண்டிப்பாக அப்படிப்பட்ட பிரச்சினை இருக்க தான் செய்யும்.

ஒவ்வொரு நாளும் நாம் வாழும் சூழ்நிலை நம்மை ஏதாவது ஒரு விதத்தில் தாக்கிக்கொண்டு தான் இருக்கும். பலருக்கு அவர்களின் மனைவி அல்லது கணவனால் கூட இது ஏற்பட்டுவிட்டுவிடுகிறது என்பது தான் உண்மை.

இதனை தவிர்க்க யோகா தியானம் போன்ற பயிற்சிகள் கைகொடுத்தாலும் அனைவராலும் அதனை செய்யமுடிவதில்லை என்பது தான் எதார்த்தமான ஒன்று. இதனை தடுக்க நமது உணவு முறையை நான் பரிந்துரை செய்கிறேன்.

இந்த மனஅழுத்தம் எப்பொழுது வெளியே காட்டும் என்பதில் தான் ஒரு சில கவனம் நமக்கு வேண்டும். எனக்கு வந்தது போல உங்களுக்கும் அதே வழியில் வராது. உங்களுக்கு வித்தியாசமாக வெளிகாட்டலாம். எனக்கு இந்த பிரச்சினை இருந்த நேரத்தில் நான் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் அப்பொழுது மறுநாள் அது எனக்கு காட்டியது. நரம்புகள் அதிகமாக துடிப்பது நடந்தது. உங்களுக்கு ஏதாே ஒரு வழியில் வரலாம்.

நான் இதனை அறிந்தபிறகு நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து சாப்பிட்டேன். எனக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பது போல சாப்பிட்டேன். அதன்பிறகு அது குறைந்து தற்பொழுது சுத்தமாக இல்லை என்று சொல்லலாம்.

உங்களை நன்றாக உற்று நோக்கினால் ஏதோ ஒரு விதத்தில் இது வெளிக்காட்டுவதை நீங்கள் உணர்ந்துவிடலாம். நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணும்பொழுது உங்களுக்கு அதிகபடியான சத்துக்கள் கிடைத்து அதுவாகவே மனஅழுத்தும் வெளியே சென்றுவிடும். 

உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு மற்றும் பிடித்தவைகளை நீங்கள் செய்தால் உங்களுக்கு இப்படிப்பட்ட பிரச்சினையில் இருந்து வெளியே வந்துவிடலாம். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த பிரச்சினை இருக்கின்றது அதனை நீங்கள் கவனிக்கவில்லை. நாள்கள் செல்ல செல்ல இது பெரியளவில் வந்து உங்களின் முன் நிற்க்கும். விரைவில் செயல்பட்டு இதனை போக்கிக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு விசயத்திலும் அதிகப்பட்சமான சொந்த அனுபவம் எனக்கு இருக்கின்றது. நிறைய சோதனை செய்துவிட்டு அதன்பிறகு தான் உங்களிடம் தெரிவிக்கிறேன்.

இன்று திருச்சி வரை செல்கிறேன். திருச்சியில் இருந்து திரும்பியபிறகு பதிவுகளை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: