வணக்கம்!
காமன் பண்டிகை தற்பொழுது எல்லா ஊர்களிலும் நடைபெறுகின்றது. நாளை காமன் தகனம் செய்வார்கள். இது எங்கள் பகுதியில் மிகவும் விஷேசமாக இருக்கும். ரதி மன்மதனுக்காக விஷேசமான ஒரு திருவிழா நடத்துவார்கள்.
ஊரில் ஒரு பொது இடத்தில் மன்மதனுக்கு கோவில் அமைப்பார்கள். அது எங்கள் பகுதியில் காமாண்டி என்ற பெயரில் அமையும். எரிந்த கட்சி எரியாத கட்சி என்று பாட்டு போட்டி எல்லாம் வந்தது இந்த பண்டிகையை வைத்து தான் வந்தது.
காமன் பண்டிகை ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் அமாவாசை முடிந்து வளர்பிறையில் மன்மதனுக்கு பந்தகால் நட்டு மண்டகபடி நடக்கும். ரதி மன்மதனுக்கு என்று திருமண கோலம் விஷேசமாக நடக்கும். தஞ்சாவூர் என்றால் மரிக்கொழுந்து விஷேசம் என்பது எத்தனை பேர்க்கு தெரியும் என்று தெரியவில்லை. இந்த பண்டிகையில் மரிக்கொழுந்தை மாலையாக தொடுத்து அணிவிப்பார்கள். சிறப்பான மணம் மரிக்கொழுந்தில் இருந்து வரும்.
நாளை மன்மதன் தகனம் நடைபெறுகின்றது. பொதுவாக இந்த மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். மன்மதன் தகனம் செய்யும் மாதத்தில் திருமணம் செய்யமாட்டார்கள். தற்பொழுது கலியுகம் என்பதால் திருமணம் செய்கின்றனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment