வணக்கம்!
இன்றைய நவராத்திரி அம்மன் யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தியவர் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.
பூர்வபுண்ணியத்தை விட்டுவிட்டு வேறு இடத்திற்க்கு இன்றைய மனிதர்கள் அதிகம் பேர் இடம்பெயர்கின்றனர். குருவின் பலன் இல்லாமல் மற்றும் பூர்வபுண்ணியாதிபதியின் அருள் இல்லாமல் இருப்பதால் தான் இடம் பெயரும் வேலைகள் எல்லாம் நடக்கின்றது.
இன்றைய உலகத்தில் அதிகமாக இராகுவின் காரத்துவம் வேலை செய்வதால் நிறைய பேர்கள் பணத்தின் தேவை அறிந்தும் இடம் பெயர்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ இராகுவின் பிடியில் பலர் சென்றுவிட்டதால் தான் இது நடக்கின்றது.
ஒருவருக்கு பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் அவர் வெளிநாட்டில் இருந்தாலும் அவர் சொந்த ஊருக்கு சென்று வாழ்வதை அதிகம் விரும்புவார். பூர்வபுண்ணியாதிபதி அவர்க்கு அந்த மாதிரியான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பார்.
வெளிநாட்டை விட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டால் அவரால் பிழைக்கமுடியாத என்று கேட்கலாம். கண்டிப்பாக அவர்க்கு அனைத்து வசதியையும் அந்த பூர்வபுண்ணியாதிபதியே ஏற்படுத்திக்கொடுப்பார்.
பூர்வபுண்ணியாதிபதியின் அருளால் அதிகமான செல்வவாக்கு மற்றும் அவர்க்கு நல்ல பெயரும் கிடைக்கும். இதனை அனுபவித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment