Followers

Tuesday, October 30, 2018

தோஷங்கள்


வணக்கம்!
          தோஷமே இல்லாத ஜாதகங்கள் இருக்கவே இருக்காது. ஏதோ ஒரு விதத்தில் தோஷங்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றன. தோஷங்கள் இருப்பதால் தான் மனிதன் இயங்கிக்கொண்டு இருக்கின்றான். இதனை அனைவரும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

பலர் என்னுடைய ஜாதகத்தில் தோஷம் இல்லை எனக்கு பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். தோஷங்கள் இல்லை என்றால் பிரச்சினை எப்படி வந்தது. தோஷங்கள் ஏதோ ஒரு விதத்தில் இருந்துக்கொண்டு அது பிரச்சினை கொடுக்கும்.

கணவன் மனைவிக்குள் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்றால் என்னிடம் சொல்லுங்கள் அதனை தீர்க்கலாம் என்று சொல்லிருந்தேன். இதற்கு பலர் அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். இது உங்களுக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் நீங்கள் என்னிடம் தொடர்பில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

யார் என்றே தெரியாமல் இதனை செய்துக்கொடுப்பது சரியில்லை என்று தோன்றுகிறது. பலர் வாட்ஸ்அப்பில் அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். என்னிடம் நல்ல தொடர்பை ஒருவர் வைத்திருந்தால் மட்டுமே இதற்கு அனுப்பவேண்டும்.

ஒவ்வொருவரும் என்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறேன். பலர் என்னை அடிக்கடி சந்தித்துக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை சந்திக்காமல் இருக்கும் நபர்களும் சந்தித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: