வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை அதனை தீர்ப்பதற்க்கு முதலில் ஒருவருக்கு பொறுமை என்பது வேண்டும். பொறுமைக்கு பிறகு தான் அனைத்தும் வேலை செய்யமுடியும்.
ஒருவருக்கு பிரச்சினை வருகின்றது என்றால் முதலில் அவர்களின் ஜாதகத்தில் உள்ள சிக்கல்களால் தான் வருகின்றது என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை களைந்து அதனை போக்கவேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் உள்ள பிரச்சினையை கண்டறிவது என்பது கொஞ்சம் சிக்கலாக தான் இருக்கும். சோதிடர்கள் இதனை கண்டறிந்தால் கூட அதற்குள்ள சரியான வழியை சொல்லமாட்டார்கள்.
முதலில் ஒரு சோதிடர்களை நம்பி இன்றைய காலத்தில் மக்கள் செல்வது கொஞ்சம் கடினம் தான் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் எல்லாம் அரைகுறையாகவே வாழ்வார்கள். சரி இதனை விட்டுவிட்டு பார்க்கலாம்.
ஜாதகத்தில் தசா பலன் மற்றும் கோச்சாரபலன் இரண்டையும் கவனித்து என்ன தற்சமயம் பிரச்சினை கொடுக்கின்றது என்பதை பார்க்கவேண்டும். இதனை நாம் அறிந்துக்கொண்டு தீர்வை சொல்லிவிட்டாலே ஜாதகர் தப்பித்துவிடுவார்.
பெரும்பாலான ஜாதகர்களுக்கு கோச்சாரபலனே பெரியளவில் பிரச்சினையை கொடுத்துவிடுகின்றது. ஏன் என்றால் பலருக்கு தசாநாதன் ஒழுங்காக வேலை செய்வதில்லை. தசாநாதன் பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தால் அவர் தொடர்ச்சியான ஒரு தொல்லையை அனுபவித்துக்கொண்டு வருவார்.
கோச்சாரபலன் அந்தந்த காலக்கட்டங்களில் மட்டும் தொல்லை கொடுப்பதால் இதனை பெரியளவில் கண்டுக்கொள்ள தேவையில்லை. தசாநாதனை அதிகம் கவனித்து அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்யவேண்டும். இதனை செய்தாலே பெரிய பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment