Followers

Friday, October 26, 2018

கோச்சார தீயபலன்கள்


வணக்கம்!
          ஒருவருக்கு கோச்சாரபடி நடக்கும் கிரகங்கள் தீயபலனை தரும் என்ற நிலை வருகின்றது என்றால் மட்டும் கொஞ்சம் உஷாராக வேண்டும். கோச்சாரபடி தீயபலன் கொடுக்கின்றது என்றால் அதிக தீயபலன்களை கொடுத்துவிடுகின்றது.

கோச்சாரபலன்கள் குறைந்த காலம் என்பதாலும் அந்த குறைந்த காலத்தில் நிறைய தீயபலன்களை கொடுக்க வேண்டும் என்பதாலும் வைத்து செய்துவிடும். தீயபலன்கள் கொடுக்கும் நிலையை வைத்து நீங்கள் அந்த விசயத்தில் உஷாராக வேண்டும்.

லக்கனத்தில் தீயகிரகங்கள் வருகின்றது என்றால் உடல்நிலையில் கொஞ்சம் உஷாராக வேண்டும். லக்கனத்தில் தீயகிரகங்கள் என்றாலே அது உடல் சம்பந்தப்பட்ட விசயத்தில் தாக்குதல் நடத்தும்.

எட்டில் தீயகிரகங்கள் வந்தால் பெரும்பாலும் விபத்து சம்பந்தப்பட்ட விசயத்தில் கொஞ்சம் உஷாராக வேண்டும். ஐந்தில் தீயகிரகங்கள் வந்தால் குழந்தைகளுக்கு பிரச்சினையை கொடுக்கும் அதிலும் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும்.

உங்களின் இராசிபடி கோச்சார கிரகங்கள் எப்படி செல்கின்றன என்பதை பார்த்துக்கொண்டு அதற்கு தகுந்தமாதிரி நடந்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: