வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு பெரும்பாலும் இளம்வயது அதிகமாக கஷ்டங்களை அனுபவித்துக்கொள்வது போலவே இருக்கின்றது. இராகு கேது கிரகங்கள் இருந்தால் அது பித்ருதோஷம் என்றாலும் பிற தீயகிரகங்கள் இருந்தாலும் அது தோஷத்தை தான் தருகின்றது.
இளமையில் இருப்பவர்களுக்கு இந்த வீட்டின் தசா நடந்தால் பெரும்பாலும் அதிகமான கஷ்டங்களை அனுபவிப்பார்கள். முக்கியமாக அடுத்த வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து அதிக எதிர்ப்பு இவர்களுக்கு கிளம்பும்.
ஒரு சிலருக்கு திருமணவயதில் இந்த வீட்டின் தசா நடக்க ஆரம்பிக்கும். இந்த வீட்டின் தசா இளம்வயதில் ஆரம்பித்தால் அவர்களுக்கு திருமண ஏற்பாடு நடக்கவே நடக்காது. திருமணம் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுத்துவிடும்.
குழந்தை வயதில் ஒருவருக்கு இந்த தசா நடந்தால் அவரின் தாய்க்கு கருக்கலைப்பு அல்லது அந்த தாயிற்க்கு பிறந்த குழந்தை இறந்து பிறக்ககூடிய வாய்ப்பு இருக்கும். இவருக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கிரகம் இவரின் இளம் சகோத சகோதரிகளுக்கு பங்கம் விளைவிக்கும்.
மூன்றாவது வீட்டில் உள்ள கிரகங்கள் ஒரு சிலருக்கு நன்மையும் அளிக்கின்றது. பக்கத்துவீட்டில் உள்ளவர்கள் மற்றும் இளம் சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். அவர்களின் சொந்த ஜாதகத்தில் அமரும் வீட்டைப்பொறுத்து பலன் மாறுப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment