Followers

Sunday, October 7, 2018

சந்திராஷ்டமம்


வணக்கம்!
          குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி போன்ற கிரகபெயர்ச்சிகளை எல்லாம் விட ஒரு மனிதனுக்கு வரும் சந்திராஷ்டமம் மிக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திக்கொடுத்துவிடும். சந்திராஷ்டமும் அன்று ஒருவர் துன்படுவதை விட வேறு பெயர்ச்சிகளில் எல்லாம் அந்தளவுக்கு துன்படுவதில்லை.

சந்திராஷ்டமும் அன்று எப்படியாவது ஒரு பிரச்சினையை ஒருவருக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே இருக்காது. மிக துல்லியாக நடக்கும் பலன்களில் சந்திராஷ்டமத்திற்க்கு ஈடு இணை இல்லை என்று சொல்லலாம்.

சந்திராஷ்டமும் நடைபெறும் நாளில் ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் மனகுழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தையாவது ஏற்படுத்திக்கொடுத்துவிடும். வீட்டில் உள்ளவர்கள் கூட சம்பந்தமே இல்லாமல் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு சில சந்திராஷ்டமம் நடைபெறும் நாளில் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றும். ஒரு சில மாதங்களில் மிகப்பெரிய அளவில் நன்மையும் நடத்திக்கொடுக்கின்றது. ஒரு சிலருக்கு அந்த நாளில் ஏதாவது ஒரு செலவை மட்டும் கொடுத்துக்கொண்டு விலகிவிடுகின்றது.

சந்திராஷ்டமம் அன்று எந்த காரியத்தையும் செய்யாமல் வீட்டில் கொஞ்சம் அமைதியாக இருப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலனை அன்று கொடுக்கும். ஒரு சிலர் விநாயகர் வழிபாட்டை சொல்லுவார்கள் அதனைவிட ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை பயக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: