Followers

Wednesday, October 3, 2018

பச்சைப்பரப்புதல்


ணக்கம்!
         நவராத்திரி அம்மன் ஹோமத்திற்க்கு கலந்துக்கொள்பவர்கள் தொடர்புக்கொள்ளவும். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி அம்மன் ஹோமம் சிறப்பாக நடைபெறுகின்றது. தங்களின் பங்களிப்பால் இது சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த வருடமும் சிறப்பாக நடைபெற பங்குக்கொள்ளுங்கள்.

உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்திற்க்கு செய்யவேண்டிய பூஜைகளை செய்ய முடியாதவர்கள் ஒவ்வொரு மாதம் அல்லது ஒவ்வொரு மூன்று மாதத்திற்க்கும் ஒரு முறை பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள். குறைந்தது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை செய்தால் நல்லது அதனை விட மாதந்தோறும் செய்வது சிறப்பு.

பச்சைப்பரப்புதலை பற்றி நிறைய பதிவுகளை ஜாதக கதம்பத்தில் கொடுத்து இருக்கிறேன். புதியவர்கள் அதனை தேடி படித்து தெரிந்துக்கொண்டு அதன்படி செய்யுங்கள். பச்சைப்பரப்புதலை செய்வதற்க்கு இந்த நாள் என்று பார்க்க தேவையில்லை. உங்களின் குலதெய்வத்திற்க்கு ஏற்ற நாள் அல்லது எந்த நாளாக இருந்தாலும் பரவாயில்லை. 

நாள் பார்த்து செய்யவேண்டும் என்பதில்லை. உங்களின் விருப்பம் போல இதனை செய்துக்கொள்ளலாம். சனிக்கிழமை கூட இதனை செய்யலாம். பலர் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களை தேர்ந்தெடுத்து செய்கின்றனர். உங்களுக்கு இந்த நாளில் தான் செய்ய வேண்டும் என்று விருப்பட்டால் செய்யலாம்.

பலருக்கு இது நல்ல பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. பலர் தொடர்ச்சியாக இதனை செய்து வருகின்றனர். மிக குறைந்த செலவு தான் ஆகும். அனைவரும் இதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: