வணக்கம்!
ஒருவருக்கு ஒரு தசா ஆரம்பிக்கும் காலத்தில் நாம் சுயபுத்தி அதனால் அவர்க்கு கொஞ்சம் பிரச்சினையை கொடுத்து அதன் பிறகு வரும் புத்திகளின் காலக்கட்டத்தில் எல்லாம் நல்லது கிடைக்கும் என்று சொல்லிவிடுவார்கள். நானும் கூட அப்படி தான் பல இடங்களில் சொல்லிருக்கிறேன்.
ஒருவருக்கு ஒரு தசா நல்லது செய்ய ஆரம்பித்துவிட்டால் அந்த தசா ஆரம்ப காலங்களில் கூட அது நல்லதை தான் செய்யும். எதுவும் நல்லது நடக்கவில்லை என்றாலும் அவர்க்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருப்பார்.
அன்றைய நாள் அன்றைய பொழுது என்று நகர ஆரம்பித்து அதன் பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும். ஒருவர்க்கு பிரச்சினை இல்லாமல் அமைதியாக இருப்பது போல தசா ஆரம்ப காலக்கட்டங்களில் இருக்கவேண்டும்.
அமைதியாக இருந்த பிறகு தான் மனிதனுக்கு தேவையான செல்வ செழிப்பு எல்லாம் தேடி வரும். தசா ஆரம்பகாலக்கட்டத்தில் எல்லாம் பிரச்சினை வந்தால் அந்த தசா முழுவதும் பிரச்சினை வந்துக்கொண்டே தான் இருக்கும்.
ஒரு தசா உங்களுக்கு ஆரம்பகாலக்கட்டத்திலேயே சரியில்லை என்றால் ஒன்று அதனை சரி செய்வதற்க்கு என்ன வழி என்பதை யோசியுங்கள் அப்படி இல்லை என்றால் அந்த கிரகத்திற்க்குரிய வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment