வணக்கம்!
தற்பொழுது மழை எல்லாம் இடங்களிலும் பெய்கின்றது. இதனை வைத்து நமது பாவங்களை போக்கும் ஒரு பரிகாரத்தை மட்டும் செய்துக்கொள்ளுங்கள். இது கொஞ்சம் எளிமையாக இருக்கும் ஆனால் அதனை செய்வதற்க்கு கடினமாக இருக்கும்.
கோவில்களில் தலவிருட்சத்திற்க்கு அதிக மதிப்பு இருக்கின்றது. இது எதனால் என்றால் அந்த காலத்தில் மரங்களை வைத்து அதில் தெய்வங்களை ஆவகனம் செய்து வழிபட்டு வந்தார்கள் அதன்பிறகு தான் சிலை வழிபாடு எல்லாம் வந்தன.
இன்றைக்கும் இந்த மரங்களுக்கு அதிக சக்தியோடு இருக்கின்றது. இதனை எல்லாம் நன்றாக உற்று நோக்கினால் இதில் இருக்கும் உண்மை உங்களுக்கு எளிதில் புரியும். இன்றும் நீங்கள் கோவிலுக்கு சென்றால் தலவிருட்சத்தை வணங்கிவிட்டு தான் வருகின்றீர்கள்.
நாட்டில் பல இடங்களின் மரம் நடுவதை ஒரு விழாவாகவே நடத்திக்கொண்டு இருப்பார்கள். விழாவோடு சரி அதன்பிறகு ஒன்றும் அதனை கவனிப்பது இல்லை என்று நினைக்கிறேன். சரி அதனை விடுங்கள் நாம் செய்ய வேண்டியதை பார்க்கலாம்.
மழைக்காலங்களில் உங்களால் ஒரு மர செடியை ஏதோ ஒரு இடத்தில் வாங்கி நட்டுவிடுங்கள். இது எதிர்காலத்தில் நமது சந்ததினர்களுக்கும் உதவும் உங்களின் பாவங்களும் போகும். மரசெடியை நட்டு அதனை வளர்த்தால் மிகப்பெரிய புண்ணியம்.
மரசெடி எல்லாம் என்னால் நட்டு பராமரிக்கமுடியாது என்று சொல்லுபவர்கள் நவதானிய விதைகளை வாங்கி காடு பக்கம் அல்லது நீங்கள் செல்லும் சமவெளியில் கூட தெளித்துவிடுங்கள். இது மழைக்காலங்களில் செய்யும்பொழுது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment