Followers

Monday, October 15, 2018

கிரகத்தின் பாதிப்பை கண்டுபிடிப்பது எப்படி?


வணக்கம்!
          ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் முதலில் அவர்க்கு அவரின் துணையார் இடம் இருந்து தான் முதல் எதிர்ப்பு வரும். நாம் அப்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம் ஏதோ கிரகங்கள் பிரச்சினை செய்கின்றது என்று புரிந்துவிடும்.

இன்றைக்கு பலருக்கு அப்படி தான் தினமும் இருக்கின்றது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. அனைவருக்கும் துணை தினமும் பிரச்சினை செய்கின்றது என்பது பொதுவாக இருந்தால் அதனை விட்டுவிட்டு உங்களின் உறவினர்கள் பிரச்சினை செய்கின்றார்களாக என்று கவனித்தால் போதும். 

துணைக்கு அடுத்தபடியாக உறவினர்கள் தான் பிரச்சினை கொடுப்பதில் அதிகமாக ஈடுபடுவார்கள். உறவினர்கள் பிரச்சினை கொடுத்தால் அதில் இருந்தும் நீங்கள் கண்டுக்கொள்ளலாம். இதனை மீறி நீங்கள் பிரச்சினையில் மாட்டுகின்றீர்கள் என்றால் அது உங்களின் கடன்காரர்களாக இருக்கும். கடன்பட்ட இடத்தில் இருந்து பிரச்சினை வரும்.

இதனை எல்லாம் புரிகின்றது இதில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று கேட்டால் உங்களின் ஆன்மீககுரு இதற்கு பதில் சொல்லவேண்டும். அவர் முடிந்த வரை இதனை எல்லாம் சரி செய்துக்கொடுப்பார்.

நீங்களே இதனை சரி செய்யவேண்டும் என்றால் முதலில் அமைதியாக இருப்பதற்க்கு என்ன வழி என்று கண்டுபிடியுங்கள் அதன் பிறகு உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்திடம் முறையிடலாம். 

உங்களின் ஜாதகத்தில் பிரச்சினை எங்கிருந்து வருகின்றது என்பதை அறிந்து அந்த கிரகத்திற்க்குரிய வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். தொடர்ந்து பிரச்சினையாக இருந்தால் பரிகாரம் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: