வணக்கம்!
நேற்று மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோவில் பழமுதிர்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம் முடித்துவிட்டு வந்தேன். சொந்த விசயமாக சென்று தரிசனம் செய்த காரணத்தால் பதிவில் முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை. மதுரை நண்பர் இராமதுரையின் உதவியோடு இந்த கோவில்களை விரைவாக தரிசனம் செய்யமுடிந்தது.
ஒரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை விட அங்குள்ள புண்ணிய நதியில் நீராடிவிட்டு வருவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனக்கு பிடிக்கின்றது என்றால் அது குரு கொடுத்த பாடம் என்பதால் அதனை நான் எங்கு சென்றாலும் செய்வது உண்டு.
நேற்றும் இராக்காயி கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடதான் சென்றேன். இராக்காயி அம்மன் கோவிலில் நன்றாக நீராடிவிட்டு தான் வந்தேன். புண்ணிய நதி புண்ணிய தீர்தத்தில் நீராடும்பொழுது நமது பாவங்களை போக்கி நமது ஆத்மா பலப்பெறும் என்பதால் இதனை செய்வது உண்டு.
நம்ம கோவில்களில் உள்ள குளங்களில் எல்லாம் நீராடுவதற்க்கு அனுமதியளிக்க வேண்டும். நமது காேவில் குளங்கள் அனைத்தும் இன்று எப்படி இருக்கின்றது என்பது உங்களுக்கே தெரியும். அனைத்தையும் வீணாக போய்விட்டது.
நீங்கள் எல்லாம் முடிந்தவரை புண்ணியதீர்தத்தில் மற்றும் புண்ணியநதியில் நீராடுங்கள். உங்களின் ஆத்மாவின் தோஷங்கள் நீங்கி நல்ல வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment