வணக்கம் நண்பர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மந்திர அனுபவங்களை ஆன்மிக அனுபவங்கள் என்ற தலைப்பில் எழுதபோகிறேன். நீங்கள் கொடுத்த அதே உற்சாகத்தை இப்பதிவிலும் கொடுங்கள். ஏன் ஆன்மிக அனுபவங்கள் என்று பெயர் மாற்றம் என்றால் சில பேர்கள் மந்திர அனுபவங்களை ஏதோ மாந்தீரிகம் என்றும் நினைக்கிறார்கள் அதனால் பெயர் மாற்றத்தோடு இதனை தருகிறேன்.
நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு சாதாரணமான வாழ்க்கை தினசரி கூலியின் வாழ்க்கை போல தான் நான் வாழ்ந்தது. அந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை வைத்து தான் மந்திரங்களின் அனுபவங்களை எழுதுகிறேன். இது உங்கள் வாழ்க்கையில் நடந்து இருக்கலாம் அல்லது நடக்காமல் இருக்கலாம். இந்த மாதிரி வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கு இது நன்மை தரும். மேல்நிலை மக்களின் நிலையை பற்றி எனக்கு தெரியாது.
இந்த பதிவில் இதை படிப்பவர்களில் ஒருவருக்கு இது பிடித்து முன்னேற்றத்தை நோக்கினால் அந்த ஒரு வெற்றி இந்த தொடருக்கு போதும்.
மந்திரங்களை பயில முதல் தகுதி
ஏமாற்றம்
இந்த அவசர உலகத்தில் பாசம் பற்று நட்பு என்று எல்லாம் கேள்வி குறியாக மாறிவிட்டது. தாய் பாசம் மட்டும் இன்றும் உயிரோடு இருக்கிறது மீதி எல்லாம் சந்தேகமாக தான் இருக்கிறது. ஒருவன் பிறந்ததும் தாய் தான் அவனை தன் உயிர் போல் வளர்க்கிறாள். அதன் பிறகு அவனுக்கு பள்ளி பருவம் தொடங்குகிறது அங்கு சில நண்பர்களை பெறுகிறான். அதன் பிறகு கல்லூரி பருவம் வருகிறது அங்கும் சில நண்பர்களே பெறுகிறான். இந்த நண்பர்களிலும் இவனை யாராவது ஏமாற்றி இருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் அது நடந்துகொண்டே இருக்கும்.
இதில் இவன் கூட படித்த நண்பர்கள் எல்லாம் எத்தனை பேர் இன்று இவன் கூட இருப்பார்கள் என்பது சந்தேகமே. இடையில் இவன் காதலிலும் விழுகிறான். இவனை காதலிப்பளும் இவனை ஒரு கட்டத்தில் ஏமாற்றுகிறாள் இவன் அப்படியே உலகமே இத்துடன் முடிந்துவிட்டது போல் உணர்கிறான். என்னடா உலகம் ஒவ்வொருவரும் ஏமாற்றுகிறார்கள் யாருமே என்னை புரிந்துக்கொள்ளவில்லையா என்று புழம்புகிறான்.
சரி அத்துடன் இவன் ஒரு திருமண செய்தால் அப்பொழுது நமக்கு ஒரு ஏமாற்றம் இல்லாத வாழ்க்கை கிடைக்கும் என்று திருமணம் செய்கிறான். அப்பொழுதும் இவன் மனதில் ஒரு சில ஏமாற்றங்கள் நடைபெறலாம். ஏமாற்றம் என்ற அனுபவம் அவனுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
இன்றைய உலகமே ஏதோ ஒரு ஏமாற்றத்தை ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிதனுக்கு கற்று கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு வகையிலும் ஏமாற்றத்தை கிரகங்கள் நமக்கு தந்து கொண்டே தான் இருக்கும் ஏன் என்றால் அப்பொழுது மட்டுமே நீ இறைவனை நோக்கி ஒரு அடிவைக்க உன் மனம் நினைக்கும் அதனால் அது நடைபெற்றுக்கொண்டே இருக்கும் ஆனால் ஒரு சிலர் மன விரக்தியில் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.அவ்வாறு எடுக்கும் முடிவு தவறானது இதை செய்வதும் கிரகங்களாக இருப்பதால் நீங்கள் அதனில் இருந்து தப்பிக்க வழியை எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு சிலர் தனிமையை நோக்கி செல்கிறார்கள் அவர்களின் மனநிலையில் ஏமாற்றம் தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் ஒரு மனநிலை எனக்கு தோன்றியது. நாம் எங்கு சென்றாலும் ஏமாற்றத்தை தரபோகிறார்கள் நம்மை கடைசி வரையிலும் அதாவது தனது இறுதி காலம் வரையிலும் ஏமாற்றத்தை தராத ஒரு ஆள் தேவை அப்படி என்று யோசித்த நேரத்தில் எனக்குள் வந்தது அந்த எண்ணம்.
தொடரும்...
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
வணக்கம் ஐயா,
வாழ்வில் கவலைகளோ,ஏமாற்றங்களோ இல்லாதவர்களே இருக்க முடியாது...இல்லையேல் நாம் ஏன் கலியுகத்தில் பிறக்க வேண்டும்...
உண்மையில் தங்களுக்கு தேடலில் கிடைத்த இப்பயணமே என்றும் நிலைத்திருக்கும் ஆன்மிக வாழ்க்கையை தந்திருக்கிறது...தேடலில் கிடைத்த விலைமதிப்பில்லா ஆன்மிகத்தை கண்டெடுத்துள்ளீர்கள்...
//* R.Srishobana said...
வணக்கம் ஐயா,
வாழ்வில் கவலைகளோ,ஏமாற்றங்களோ இல்லாதவர்களே இருக்க முடியாது...இல்லையேல் நாம் ஏன் கலியுகத்தில் பிறக்க வேண்டும்...
உண்மையில் தங்களுக்கு தேடலில் கிடைத்த இப்பயணமே என்றும் நிலைத்திருக்கும் ஆன்மிக வாழ்க்கையை தந்திருக்கிறது...தேடலில் கிடைத்த விலைமதிப்பில்லா ஆன்மிகத்தை கண்டெடுத்துள்ளீர்கள்...*//
உண்மை தான் எடுத்த ஆன்மிகத்தை அடுத்தவருக்கு கொடுப்பதில் தான் திருப்தி இருக்கும் அதற்கு முயற்சி எடுத்து வருகிறேன்
Post a Comment