வணக்கம் நண்பர்களே மனிதனின் பிறப்பே அவன் முக்தி நிலையை அடைய வேண்டும் என்று தான் கடவுள் மனிதனை படைக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் அந்த வகையில் ஒரு நல்ல கருத்தை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
திருநள்ளாற்று புராணம் என்ற புராணத்தில் ஒரு தகவல உள்ளது. மனிதன் மோட்சத்தை அடைந்து பிறவா நிலை அடைய இந்த புராணத்தில் ஒரு பாடல் உள்ளது. திருநள்ளாறு சோழநாட்டு தலங்களில் 52 தலமாகும்.பாண்டிச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ளது சனி வழிபாட்டிற்க்கு உகந்த இடம்.
தல இறைவன் - தர்பாரண்யேசுவரர்
தல இறைவி - போகமார்த்த பூண்முலையாள்
தல பயிரினம் - தருப்பைப்புல்
தல தீர்த்தம் - நளதீர்த்தம்
சம்பந்தர் 4 அப்பர் 2 சுந்தரர் 1 மொத்தம் 7 பதிகங்கள் பாடல் பெற்ற தலம்.
இலிங்கோற்பவ சருக்கம் என்ற பகுதியில் 36 வது பாடலாக ஒன்று வருகிறது அதில் பிறவி தீர்வர் பாவமும் போகும் என்று ஒரு பாடலை தந்துள்ளார்கள் அதனை உங்களுக்கு அப்படியே தருகிறேன் படித்து பாருங்கள்.
நாடகம்ஆடும் எங்கள் நம்பர் நள்ளாற்றைச் சூழக்
கூடரும் ஐங்குலேசம் கூடிய சராசரங்கள்
வீடுஅடைந்திருந்த பேறு மேவும் ஓர்கால் இருப்பின்
நீடரும் பிறவி தீர்வர் நினைக்கில் எப்பவமும் போமாம் .
என்று வருகிறது உங்களின் பிறவி போக்கி மோட்சத்தை அடைய இந்த தலம் வழி செய்கிறது. அந்த தலத்திற்க்கு சென்று இரவு தங்கி மறுநாள் இறைவனை தரிசிப்பது நல்லது.
எப்படி பட்ட பாவமும் தீர்த்து வைக்கும் இறைவனை நாமும் ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவோம். இது எனது வேறு பதிவில் இருந்து உங்களுக்கு தருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment