Followers

Friday, October 26, 2012

ஈசாவாஸ்ய உபநிஷதம் 3



வாழ்க்கை துணையை வைத்து தான் நமது ஆன்மீக தொண்டை முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஒரு போதும் கிடையாது ,... நம் தந்தை தாய்க்கு செய்யும் பணிவிடைகளை ஏன் செய்கிறீகள் என்று கேக்க இந்த சர்வ லோகத்தில் யாருக்கும் உரிமை இல்லை. 

ஆன்மீகத்தில் இறைவனை நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக கருதாமல் நமக்குள் இருந்து நம்மை இயக்கம் சக்தியாக கருத வேண்டும்.இறைவனை நம் நண்பனாக, நம் குழந்தையாக கொஞ்சி மகிழும் போது ஆன்மீகத்தின் சக்தியை உணர்கின்றோம் .. இதற்கு இடம், நேரம் காலம், சுற்றம் என எதுவும் தடையாக இருக்க முடியாது.. 

காதலாகி கசிந்த சம்பந்தன் இறைவனை கண்டார்... இசைக்கும் காதலுக்கும் இறை செவி சாய்க்கும் என்பது தமிழகம் நன்கு அறிந்ததுவே... ஆன்மீகத்தின் வெற்றி என்பது இந்த பூத உடல் மண்ணை விட்டு பிரிந்தாலும் ஆன்மா ஐந்து எழுத்தை உச்சரிபதே .... சிவாயநம என்பதே சாலச்சிறந்தது.. 

நம்முடைய உரையாடலை உணர்வுகளை பாசத்தினை இறைவனார் புரிந்துகொள்ள காரணமாக செயல்படும் கருவியே ஆன்மீகமே தவிர.. கற்றோர் சொல்லுவது போல ஆன்மீகம் நம்மை நெறி படுத்தும் ஆன்மிகம் தான் நம்மை நேர்வழியில் நடத்தும் என்றால், தமிழில் சுயஒழுக்கம் என்ற வார்த்தை எதற்கு...ஆன்மீகம் என்ற கருவியை கொண்டு புறக்கண்கள் மூடி அகக்கண்கள் திறந்தால் இறை நம் அருகில் அமர்ந்து நம் உச்சி முகர்வதை உணரலாம்.. 

ஆன்மீகத்தில் வெற்றி தோல்வி ஒருபோதும் கிடையாது.... 

நன்றி .

தங்களின் பதிலுக்கு நன்றி. பெண்களுக்கு ஒரு குரு கிடைக்க வேண்டும் என்பதால் அவ்வாறு சொல்லப்பட்டது அவர்களின் தாய் தந்தை குருவாக அமைந்தால் இன்னும் மிகச்சிறப்பு தான். நமது தாய் தந்தையர்கள் இடைவெளிவிட்டதால் இன்று நமக்கு குரு கிடைப்பதற்க்கு கஷ்டமாக உள்ளது. 

நீங்கள் சொன்ன கருத்து அனைவருக்கும் இந்த நிலை வந்துவிட்டால் அது மிகப்பெரிய விசயமாக தான் இருக்கும். சாதாரண மனிதருக்கு இந்த நிலையை அடைய வழிகாட்டி வேண்டும். அந்த வழிகாட்டி தான் குரு. நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.  நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: