Followers

Wednesday, October 24, 2012

ஈசாவாஸ்ய உபநிஷதம் 1


R.Srishobana


ஆன்மிகத்தில் வெற்றி பெறுவதற்கு நல்ல வாழ்க்கை துணை அமைவது தான் முதலில் அவசியம் என்று நினைக்கின்றேன்...அதுவே பாதி வெற்றி தான்...ஆன்மிகத்தை நாம் தினசரி செய்ய வேண்டிய அத்தியாவசிய செயலாகக் கருதி வணங்க‌ வேண்டும்...கடமைக்காக மட்டும் நினைத்துக் கொண்டு வணங்கக் கூடாது...பின்பு நாம் ஆன்மிகத்தில் செல்வதன் நோக்கத்தையும் உணர்தல் அவசியமாகும்...


நாம் முடிந்தவரையில் நல்லவர்களாகவும்,தூய்மையானவர்களாகவும் வாழ்தல் தான் நமது ஆன்மீகத் தேடலுக்கான காரணமாக அமைய வேண்டும்,அப்படி எண்ணி வணங்கினால் தான் நமது தேடல் பூர்த்தியாகும் என்பது என்னுடைய கருத்து...நன்றி... 


வணக்கம் தங்களின் பதிலுக்கு நன்றி உங்களின் விருப்பத்திற்க்காக தான் ஆன்மீக பதிவுகள் வெளியிடுகிறேன். தாங்கள் சொல்லுவது சரி. 

Raja

நீங்கள் சொல்லுவதை நான் சரிதான் என்கிறேன். ஆனால் அப்படி வாழ்க்கை துணை அமையவில்லை என்றால் அதையும் ஏற்றுக்கொண்டு இறைஅருளை தேடுவது சிறந்தது ஆன்மிகத்தில் வெற்றி அல்லது தோல்வி கிடையாது. அது ஒரு உணர்வு.

வணக்கம் தங்களின் பதிலுக்கு நன்றி நீங்கள் ராஜா என்று உங்கள் பெயரை போட்டு இருக்கிறீர்கள் ஆனால் வாழ்க்கை துணை அமையவில்லை என்றால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிருக்கிறீர்கள். ஆண்களுக்கு இது பிரச்சினை இல்லை. வாழ்க்கை துணையை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் சொல்லுவது பெண்களுக்கு தான். அவர்களால் தான் வெளியிடங்களுக்கு செல்லுவது ஆபத்து என்பதால் கணவரை தேர்ந்தெடுக்கும் போது ஆன்மிகவாதியாக தேர்ந்தெடுங்கள் என்று சொல்லுகிறேன். 

நீங்கள் ராஜா வாகவே இருந்தால் இந்தியாவில் எத்தனையோ ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு இருக்கின்ற பெண்கள் இருக்கிறார்கள்.அவர்களை தேர்ந்தெடுங்கள் முதலில் ஆன்மிகத்திற்க்கு பணக்காரன் ஏழை என்று வித்தியாசம் பார்க்க முடியாது. நீங்கள் பணக்காரனாக இருந்தால் ஒரு ஆன்மீகம் உள்ள ஏழை பெண்ணை தேர்ந்தெடுங்கள். கண்டிப்பாக கிடைப்பார்கள். நீங்கள் பணக்காராக இருந்தால் ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்யும் பட்சத்தில் நீங்கள் கடவுள் தன்மையில் உயர்வீர்கள்.

ஆன்மீகத்தில் வெற்றி தோல்வி கிடையாது என்று சொல்லுகிறீர்கள் நீங்கள் சொல்லுவதை போல் இருந்தால் அனைவருக்கும் ஆன்மீக தேடல் இருந்து இருக்காது.

ஆன்மீகம் என்பது ஒரு உணர்வு என்று சொல்லியுள்ளீர்கள்.
அனைவரும் இப்படி தான் சொல்லுகிறார்கள். உணர்வு என்றால் அது எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்.

உங்கள் மேல் கோபபட்டு இதை சொல்லவில்லை உங்கள் மூலம் பல பேருக்கு இதை சொல்லுகிறேன்.

ராஜா  அவர்களே ஆன்மீகத்தில் இருக்கும் பெண்ணை தேடுவது எளிது. ஆன்மீக தேடல் தான் கடினம். பொதுவாக ஆன்மீகத்தில் இருப்பவர்கள் அனைவரையும் மனிதராக தான் பார்ப்பார்கள்.

ஏற்ற தாழ்வு இருக்க கூடாது. நல்ல ஆன்மீக நாட்டம் உள்ள பெண்ணாக அமைய இறைவனை உங்களாக நான் பிராத்திக்கிறேன். நன்றி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: