வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் ஒரு முக்கியமான தகவலை சொல்ல வேண்டும் என்று ஆவல் இருந்தது அதற்கு இன்று தான் நேரம் வந்தது. என்னை அனைவரும் போனில் பேசும்போது சுவாமி , குருஜீ, ஐயா என்று கூப்பிட்டு பேசுகிறார்கள் முதலில் இதனை தவிருங்கள் என்னை பெயர் சொல்லி கூப்பிடுங்கள். உங்களை நண்பர் என்று தானே கூப்பிடுகிறேன் அதனால் நீங்களும் தாராளமாக என்னை பெயர் சொல்லி கூப்பிடலாம். வயதில் பெரியவர்கள் எல்லாம் இவ்வாறு கூப்பிடும் போது அது எனக்கே தர்மசங்கட நிலை ஏற்படுகிறது.
நான் ஒரு சாதாரணமான மனிதன் தான் உங்களை போல எனக்கும் அனைத்து ஆசைகளும் உள்ளன என்று பல பதிவுகளில் சொல்லிருக்கிறேன். நீங்கள் அதை படித்தும் இருக்கிறீர்கள் ஆனால் நீங்கள் மாறாமல் திரும்பவும் அவ்வாறு அழைக்கிறீர்கள். மனிதன் என்ன தான் உழைத்து சக்தியை திரட்டினாலும் ஒரு காலும் அவனால் கடவுளாக மாறமுடியாது என்பதை நினைவில் வையுங்கள்.
எப்பொழுதும் சொல்லுகிற விசயத்தை மட்டும் பார்க்க வேண்டும் அதை எடுத்து உங்கள் மனதில் வைத்துக்கொண்டு அதன் படி உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் அதை விட்டுவிடுகிறீர்கள் சொல்லுகிறவனை பிடித்துக்கொள்வது உங்களை நீங்களே முட்டாளாக மாற்றும் செயல் அது.
பல சாமியார்களை கவிழ்ப்பது இந்த மாதிரியான செயல்கள் தான் என்பதை முதலில் நினைவில் வையுங்கள்.
நம்மிடம் இருக்கும் புராணங்களில் சொல்லுகின்ற விசயங்களை பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். கடவுள் கூட மனித பிறப்பு எடுத்தால் அவன் ஒரு நிலையை விட்டு தாண்டமுடியாது என்பதை பல புராணங்கள் கூறுகின்றன உதாரணத்திற்க்கு ராமாயணத்தில் இராமனாக அவதாரம் எடுத்த கடவுள் என்ன செய்தார் அவர் ஒரு நிலையிலும் மனிதனுக்கு முடியும் காரியத்தில் இருந்து தவறியும் மீறி செய்யவில்லை.
சீதையை கடத்தி செல்லும் போது அவனால் தன் மனதால் அறிந்திருக்க முடியும் ஆனால் அறியமுடியவில்லையே அவன் கடவுள் தானே அவனுக்கு தெரியாத என்று நீங்கள் நினைக்கலாமே. அவன் மனிதன் போல அவதாரம் எடுத்த பிறகு மனிதனுக்கு என்ன செயல் செய்ய முடியுமோ அதை தான் செய்தான்.
அவன் நினைத்திருந்தால் ராமேஷ்வரத்தில் இருந்து ஒரே ஜம்பாக இலங்கைக்கு சென்று இருக்க முடியும் ஏன் அவன் பாலத்தை கட்டினான் என்று உங்கள் மனதால் நினையுங்கள். அப்பொழுது மனிதனால் முடியும் காரியத்தை உங்களுக்கு தெரியவரும்.
எண்ணற்ற புராணங்கள் உங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன ஆனால் நீங்கள் அதை அறியாமல் அவர் அதை தருகிறார் இவர் இதை தருகிறார் என்று சொல்லிக்கொண்டு அவன் பின்னாடி சுற்றுவது.அவன் ஏதாவது பண்ணினால் அவன் மோசடிக்காரன் என்று திட்டுவது அவன் கொள்கை சரியில்லை என்று சொல்லி வாழ்த்திய வாயால் அவனை கொலை செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
இது கலியுகம் மனிதன் தன் கர்ம கணக்கை முடிக்க வந்திருக்கிறான். அவன் எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானலும் மாறலாம். இது தான் நியதி இதை நீங்கள் நினைத்தால் சாமியார்கள் விழுந்த கதையை நீங்கள் திட்டமாட்டீர்கள்.
நாம் படித்து இருக்கிறோம் சிவனடியார்கள் ஆழ்வார்கள் சித்தர்கள் எல்லாரும் அவனை அடைந்து விட வேண்டும் என்று அடைந்தார்கள். கலிபிறந்தால் நமக்கு இங்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள் அவர்கள் நினைத்திருந்தால் அவர்கள் உடம்பை மறைத்துவிட்டு இங்கேயே இருந்து இருக்கலாம் ஆனால் அவர்கள் கலியுகத்தில் எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு அறிந்து அவனிடம் ஐக்கியமானார்கள்.
கடவுள் மனிதன் மூலம் தான் செய்ய வைக்கமுடியும் இந்த கலியுகத்தில் மனிதன் ஒரு கருவி தான் அவன் கடவுள் கிடையாது மனிதன் என்கின்ற கருவி மூலம் அவனை அடைய வழியை தருகிறார். கருவி சில நேரத்தில் கோளாறு செய்ய ஆரம்பித்தால் கடவுள் வேற கருவி மூலம் செய்ய வைப்பார். நீங்கள் கருவியை பார்க்கிறீர்கள் கருவியை பிடித்துக்கொள்கிறீர்கள். அந்த கருவியை பிடித்தால் துன்பத்தை அடைவீர்கள். என் கருத்தை படித்து நீங்கள் முன்னேற்றம் அடைந்தால் போதுமான ஒன்றாக இருக்கும். கலியுகத்தில் ஒருவன் கோவிலுக்கு செல்லுவதே பெரிய விஷயம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
/////கடவுள் மனிதன் மூலம் தான் செய்ய வைக்கமுடியும் இந்த கலியுகத்தில் மனிதன் ஒரு கருவி தான் அவன் கடவுள் கிடையாது மனிதன் என்கின்ற கருவி மூலம் அவனை அடைய வழியை தருகிறார். கருவி சில நேரத்தில் கோளாறு செய்ய ஆரம்பித்தால் கடவுள் வேற கருவி மூலம் செய்ய வைப்பார். நீங்கள் கருவியை பார்க்கிறீர்கள் கருவியை பிடித்துக்கொள்கிறீர்கள். அந்த கருவியை பிடித்தால் துன்பத்தை அடைவீர்கள். என் கருத்தை படித்து நீங்கள் முன்னேற்றம் அடைந்தால் போதுமான ஒன்றாக இருக்கும். கலியுகத்தில் ஒருவன் கோவிலுக்கு செல்லுவதே பெரிய விஷயம்.////
:)
Post a Comment