Followers

Sunday, October 14, 2012

மகாளய அமாவாசை



வணக்கம் நண்பர்களே நாளை அமாவாசை ஒரு நண்பர் எனக்கு நாளை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொன்னார் அவர் மூலம் உங்களுக்கும் ஒரு தகவல்களை சொல்லிவிடலாம் என்று இப்பதிவை வலையேற்றுகிறேன்.

15-10-2012 அன்று புரட்டாசி அமாவாசை வருகிறது.  இது மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இறந்தவருக்கு திதி கொடுக்க வேண்டும் என்பது மதத்தின் கோட்பாடு உங்களின் முன்னோர்களுக்கு அவ்ர் அவர்கள் இறந்த திதியில் தர்பணம் செய்வார்கள். ஒரு சிலருக்கு இறந்த திதி தெரியாது. அவ்வாறு உள்ளவர்கள் இந்த புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையில் திதி கொடுங்கள்.

இந்த அமாவாசையில் நமது முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக  பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.   இதை எல்லாம் எவன் பார்த்தான் என்று கேட்காமல் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் தாய் தந்தை இருந்தால் நீங்கள் திதி கொடுக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்யுங்கள். அன்னதானம் என்றவுடன் 100 பேருக்கு 1000 பேருக்கு தான் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் கையில் இருக்கும் பணத்தில் ஒருவருக்காவது அன்போடு வாங்கி கொடுகங்கள் அது போதும். கண்டிப்பாக உங்களின் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு உண்டு. 

ஒரு நாள் மட்டும் வாங்கி கொடுத்தால் போதுமா என்று நினைக்க தோன்றும். எப்படி அனைவருக்கும் உணவை தருவது என்று ஒரு யோசனையை உங்களின் மனதில் ஓட்டினால் உங்களை இறைவன் எங்கோ கொண்டு சென்றுவிடுவான் எத்தனை தலைமுறை செய்த பாவங்களும் இந்த மனநிலைக்கே கரைந்துவிடும்.செயல்படுத்தினால் இறைவன் உங்களை தேடிவருவான். 

காகத்திற்க்கு சாதம் வையுங்கள்,பசுமாட்டிற்க்கு கீரை பழம் வாங்கி கொடுங்கள். யானைக்கு காய்கறிகளை வாங்கி கொடுங்கள்.என்ன நண்பர்களே போதுமா இந்த தகவல்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: