Followers

Friday, October 19, 2012

ஆன்மீக அனுபவங்கள் 5



கேள்வி


வணக்கம் ஐயா,

நான் பெரும்பாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபடுவேன்,ஆனால் தாங்கள் கூறியள்ளபடி ஒரு சக்தி தெய்வத்தை எண்ணியல்ல...முதலில் எங்கள் குல தெய்வத்தை நினைத்துக் கொண்டு பின்பு பிள்ளையார்,மகாலக்ஷ்மி,சிவன்,விஷ்ணு,நவகிரகங்கள் என்று வணங்குவேன்...சென்ற பதிவுகளில் தாங்கள் கூறியதை படித்தவுடன் நான் செய்வது தவறோ என்று நினைக்க தோன்றுகிறது...நான் செய்வது தவறான வழிமுறையா?...மந்திரங்கள் உச்சாடணம் செய்ய நானாகவே கற்றுக் கொண்டேன்...
சில‌ர் பெண்க‌ள் அதிக‌ம் ம‌ந்திர‌ங்க‌ளை உச்சாட‌ண‌ம் செய்வ‌து த‌வ‌று என்கிறார்க‌ள்...அத‌னால் த‌ற்போது குறைத்து கொண்டேன்...நான் யோக‌ ப‌யின்று இருப்ப‌தால் "ஓம்" ம‌ந்திர‌த்தையே அடிக்க‌டி விரும்பி சொல்லிக் கொண்டேயிருப்பேன்...இதுவும் ச‌ரி தானா?நான் வ‌ழிப‌டுவ‌து எல்லாம் ஒன்றை நினைத்து தான் அறிந்தும்,அறியாம‌லுல் நான் செய்த‌ பிழைக‌ளையும்,பாவ‌ங்க‌ளையும் போக்கும்ப‌டி தான்...நான் செய்யும் வ‌ழிமுறை ச‌ரிதானா?பிழையிருப்பின் ச‌ரியான‌ வ‌ழிமுறையினை காட்ட‌ வேண்டுகிறேன்...நன்றி ஐயா...

ஒரு வாசகர்.

பதில்

ஒன்றும் தெரியாமல் செய்யும் போது அது தவறு அல்ல. நீங்கள் சொல்லுவதை பார்க்கும் போது அனைத்து தெய்வங்களையும் நீங்கள் வணங்குகிறீர்கள் நமக்கு ஏதாவது ஒரு தெய்வத்தை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் ஏகாப்பட்டதை எடுத்துக்கொள்ள கூடாது. ஒரு தெய்வத்தை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். எதற்க்கும் முதலில் விநாயகரை வணங்கிவிட்டு அடுத்து குலதெய்வத்தை வணங்கிவிட்டு உங்கள் இஷ்டதெய்வத்தை வணங்க வேண்டும். முடிவில் ஆஞ்சநேயரை வணங்கி முடித்தால் போதும்.

சில‌ர் பெண்க‌ள் அதிக‌ம் ம‌ந்திர‌ங்க‌ளை உச்சாட‌ண‌ம் செய்வ‌து த‌வ‌று என்கிறார்க‌ள்...

இது உண்மையில்லை இது ஆண்களின் சதி என்று தான் சொல்ல வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு சக்திகள் உடனே கிடைத்துவிடும். அதைபோல் பெண்கள் கற்புடையவர்களாக இருக்கும்பட்சத்தில் அது உடனே கிடைத்துவிடும். அவர்கள் சொன்னால் உடனே நடந்தும் விடும். இந்த விசயத்தை ஆண்கள் தெரிந்துக்கொண்டு பெண்களை அது எல்லாம் கற்றுக்கொள்ள கூடாது என்று சொல்லிவிட்டார்கள். நீங்கள் உயர்நிலையில் கற்கும்போது உங்கள் கணவர் உங்களுக்கு குருவாக அமைந்தால் நன்றாக இருக்கும்.

ஒரு நிகழ்வை தவறு என்று மனம் நினைக்க துவங்கிவிட்டால் அப்பொழுதே கடவுள் உங்கள் மீது பார்வை செலுத்திவிட்டார் என்று அர்த்தம்.

ஏதாவது குருவை வைத்துக்கொண்டு நீங்கள் பயிலுங்கள் மிக உயர்ந்த அனுபவத்தை நீங்கள் பெறலாம். உங்களுக்கு தேவைபடும் உதவியை என்னை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: