Followers

Thursday, October 25, 2012

சோதிடம் : ஏழாம் வீட்டு தசாவும் மரணமும்



வணக்கம் நண்பர்களே நாம் சோதிட பகுதியில் பார்த்துக்கொண்டு இருப்பது ஏழாம் வீட்டு தசா. அதன் பலனை ஒரளவுக்கு தந்துள்ளேன்.

ஒருவருக்கு ஏழாவது வீட்டு தசா நல்ல பலனை தரும் என்றாலும் இந்த ஏழாவது வீட்டு தசா ஒருவருக்கு மரணத்தையும் தரும். ஒருவனை கொல்லுவதில் முதலிடத்தில் இருப்பவன் இந்த ஏழாம் வீடு தான் பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் மரணத்தைப் பற்றி நான் ஏழாவது வீட்டு தசாவில் எழுதவில்லை.

உங்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடக்கும் போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நம்முடைய வாழ்நாட்களை காட்டும் இடம் எட்டாம் வீடு. எட்டாவது வீட்டிற்க்கு பனிரெண்டாவது வீடு ஏழாம் வீடு. ஒரு வீட்டிற்க்கு பனிரெண்டாவது வீடு அந்த வீட்டிற்க்கு பாதகம் செய்யும் வீடு அதனால் உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். 

ஏழாம் வீட்டு தசா நடை பெற ஆரம்பிக்கும் போது அந்த தசா நாதனை திருப்திப்படுத்துங்கள் பாதுகாப்பு அற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள். மருத்துவரை அணுகி உடம்பை பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.

உடம்பில் ஏதாவது மாற்றம் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது நன்மையளிக்கும்.ஒரு சிலருக்கு ஏழாம் வீட்டு தசா நடைபெறும் போது அந்த வீட்டில் ராகு கேது இருந்தால் மரணத்தை தராது அதன் பிறகு ராகு கேதுகளின் தசா ஆரம்பித்தால் மரணத்தை கொடுக்கும். ராகு கேது அமரும் இடத்தின் பலனை கொடுப்பதால் அவ்வாறு நடைபெறும். நீங்கள் ஏழாம் வீட்டு அதிபதியின் தசாதான் முடிந்துவிட்டதே என்று நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் பிறகு வரும் ராகு கேதுகளின் தசாவில் ஆளை கொன்றுவிடும் இதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஏழாம் வீட்டு தசா நடைபெறும் போது குலதெய்வ வழிபாடு மற்றும் அந்த தசா நாதன் வழிபாடு போன்றவை நன்மையளிக்கும். இதனை செயது நீங்கள் மரணத்தை தள்ளிபோட்டு உங்களின் கடமைகளை செய்யுங்கள்.

மிருத்துஞ்ச ஜெபம் அல்லது ஹோமம் செய்வதால் ஆயுள் நீடிக்கும். சுதர்சன ஹோமம் செய்யலாம் இதிலும் ஆயுள் நீடிக்கும். நோய்கள் வராமல் இருக்க தன்வந்தரி ஹோமம் செய்வதும் நன்மையளிக்கும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: