வணக்கம் நண்பர்களே நாளை (13-10-2012) அன்று சனிப்பிரதோஷம் வருகிறது. சிவன் கோவில் சென்று மாலை நடைபெறும் பூஜைகளில் கலந்துக்கொள்ளுங்கள்.உங்களால் முடிந்தால் பூஜைக்கு உரிய சாமான்களை வாங்கி கொடுங்கள்.
உண்ணும் பொருட்களாக இருந்தால் அதிகமாக வாங்கி கொண்டு வீண் செய்யாதீர்கள். வழியில் இருக்கும் ஏழை மக்களுக்கு வாங்கி கொடுங்கள். அபிஷேகத்திற்க்கு என்று லிட்டர் கணக்கில் பாலை வாங்கிக்கொண்டு கொடுக்க வேண்டாம் பத்து லிட்டர் வாங்கினால் ஒன்பது லிட்டரை ஏழைகளுக்கு கொடுங்கள். யாரும் பாலை குடிப்பதில்லை பாலை காய்ச்சி குடிக்க கொடுங்கள். எந்த கடவுளும் எதுவும் கேட்டதில்லை. அடுத்த மனிதனுக்கு கொடுக்கும் போது அந்த சிவன் உன்னை ஆசிர்வதிப்பார்.
உங்கள் வசதியைப்பொருத்து வாங்கிக்கொடுங்கள் பூஜைக்கு வாங்கிகொடுங்கள் வாங்கி கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. பூஜைக்கும் வாங்கிகொடுங்கள் அங்கு உள்ள ஏழைகளுக்கும் வாங்கிகொடுங்கள். உண்மையான அர்பணிப்பாக இருக்கும்.
நாளை சனிபிரதோஷம் என்பதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.
கோவிலுக்கு செல்லமுடியாதவர்கள் வீட்டில் இருந்தே பிரதோஷ நேரத்தில் மனதில் நினைத்துக்கொள்ளலாம். நான் மனதில் நினைத்து தான் பிரதோஷ நேரத்தில் வழிபடுவேன். பெரும்பாலும் இவ்வாறு தான் வழிபாடு இருக்கும். நேரம் இருந்தால் கோவிலுக்கு செல்வது உண்டு.
பதிவு எழுதாகிவிட்டது எழுதியதற்க்கு ஏதாவது தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும் நான் படித்த பிரதோஷ பூஜைக்கு நாம் கொடுக்கும் பொருட்களின் பயனை தருகிறேன்.
நாம் மலர்களை பூஜைக்கு கொடுத்தால் தெய்வ தரிசனம் எளிதில் கிடைக்கும். பால் கொடுத்தால் நோய்கள் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் கொடுத்தால் எல்லா வளமும் கிடைக்கும்.நெய் கொடுத்தால் முக்தி கிடைக்கும்.
நீங்கள் விவசாயிகளாக இருந்தால் பழங்களை கொடுக்கலாம் உங்களுக்கு இந்த வருடம் நல்ல விளைச்சல் கிடைக்கும். இதை எல்லாரும் கொடுங்கள் ஏன் என்றால் விவசாயி இல்லை என்றால் நாடு இல்லை. இப்படி கொடுத்தாலும் மழை பெய்கிறதா என்று பார்க்கலாம்.
நீங்கள் சந்தனத்தை கொடுத்தால் நல்ல இறைசக்தியை நமக்கு கொடுப்பார். இதை கொடுத்து உங்களுக்கு இறைசக்தியை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு எந்த காரியத்திலும் எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதா நீங்கள் சர்க்கரையை கொடுங்கள் உங்களின் எதிர்ப்புகள் மறையும்.
நல்ல உடல்வாகு வேண்டுமா தேன் கொடுங்கள் உங்களுக்கு அடுத்தவரை கவர்ந்து இழுக்கும் சரீரம் அமையும்.
உங்களுக்கு நல்ல செல்வவளம் வேண்டும் என்றால் நீங்கள் பஞ்சாமிர்த்தை கொடுக்க வேண்டும்.
உங்களுக்கு சுகமான வாழ்வு வேண்டுமா அப்படி என்றால் நீங்கள் எண்ணெய் கொடுக்க வேண்டும்.
நீங்கள் நாளை சனிபிரதோஷத்தில் கலந்துகொண்டு உங்களின் பூரவஜென்மத்தின் கர்மாவை குறைத்துக்கொண்டு நல்ல வாழ்வு வாழ என்னால் முடிந்த உதவியை நான் உங்களுக்கு வழங்கி உள்ளேன். நீங்களும் இதனை கடைபிடித்து உங்களை சார்ந்தவர்களையும் கடைபிடிக்க சொல்லுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Dear RajeshSubbu
Nice blog.
Keep post like this type of article.
Good in article different angle & you are telling real life (Makkal Thonde mahesan thondu).
Really you are Excellent. Thanks RajeshSubbu.
Thanks
Regards
Arul Kumar Rajaraman
Arulkumar Rajaraman
வருக வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி. தொடருவோம்.
Post a Comment