வணக்கம் நண்பர்களே என்னிடம் சோதிட ஆலோசனை கேட்பவர்களில் பணத்தை ஏமாந்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் இழந்து விட்டு என்னிடம் வந்து கடனை திருப்பி அடைக்க வேண்டும். ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.
குறிப்பாக ஒரு மாவட்டகாரர்கள் அதிகம் பேர் இதில் ஈடுபட்டு இருப்பது தெரியவருகிறது. அவர்கள் பணத்தை இழந்த பிறகு சோதிடத்தை பார்ப்பது தவறு. சோதிடத்தில் ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் வீட்டு தசாவில் தான் இப்படி பணம் நம்மை விட்டு போகும்.
எந்த வியாபாரமாக இருந்தாலும் நீங்கள் முதலில் உங்கள் ஜாதகத்தை ஒருமுறை நன்றாக பார்த்துவிட்டு வியாபாரத்தில் இறங்குங்கள். அப்பொழுது மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும்.
நான் எந்த மாவட்டம் என்று சொல்லவில்லை ஏன் அவர்களை நாம் பகைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆலோசனை தான் இது. பணத்தை சம்பாதித்துவிட்டால் அதை கட்டி காப்பது கடினம். அதை பல மடங்கு பெருக்க வேண்டும் நினைப்பது தவறு இல்லை அதற்கு நீங்கள் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் உள்ள வியாபாரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.
அதிக ஏமாற்றும் தொழில்களை கொண்டவர்கள் முதலில் குறி வைப்பது உங்களை தான் அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இதில் பெண்களும் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழந்துவிடுகிறார்கள்.
ஷேர்மார்க்கெட்டில் இறங்குவது எச்சரிக்கையுடன் குறைந்த வருமானம் வந்தாலும அன்றைக்கு அது போதும் என்று எண்ணத்துடன் எழுந்து போய்விட வேண்டும். மீண்டும் மீண்டும் வருமானம் வரும் என்று நாட்முழுவதும் அதிலேயே கவனத்தை வைத்து இருந்தால் பணத்தை இழக்க நேரிடும். உங்களை அந்த முருகன் தான் காப்பாற்ற வேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment