Followers

Sunday, October 21, 2012

மீனம் : ஏழாவது வீட்டு தசா



வணக்கம் நண்பர்களே மீன ராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கு ஏழாவது வீட்டு தசா நடைபெற்றால் என்ன பலன் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மீன லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். மீன லக்கனத்தின் அதிபதி குரு. ஏழாவது வீட்டு அதிபதி லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் புதனுக்கு இந்த வீடு நீசம்

திருமண ஏற்பாடு மாமன் வகையில் இருந்து வரும். திருமணம் தாமதமாக நடைபெறும். திருமண வாழ்வில் விரிசல் உண்டாகும். சில நேரங்களில் துணைவர் நன்றாக நடந்துக்கொள்வார்.

ஏழாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு அண்ணன் மூலம் நடைபெறும். திருமண ஏற்பாடு செய்தவுடன் விரைவில் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். வீட்டிற்க்கு புதிதாக ஒரு நபர் தோன்றுவார். நல்ல பணவரவு இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு மூன்றாவது வீடு ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன் புதனுக்கு இந்த வீடு நட்பு

திருமண ஏற்பாடு பெரும்பாலும் பெண்கள் மூலமாக நடைபெறும். திருமணம் உடனே நடைபெறும். திருமண வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கூட்டு தொழில் கமிஷன் தொழிலாக செய்தால் வருமானம் வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு நான்காவது வீடாக வருவது மிதுனம் அதன் அதிபதி புதன் புதனுக்கு சொந்த வீடு.

திருமண ஏற்பாடு தாயார் வழியில் நடைபெறும். திருமண வாழ்வு சுகமாக இருக்கும். உங்கள் துணைவர் தாயாரை அனுசரித்து செல்வார் வீடுகள் வாகனங்கள் அமையும். மொத்தத்தில் சந்தோஷமான தசை இது.

ஏழாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன் புதனுக்கு இந்த வீடு பகை.

பெரும்பாலும் திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். இருவரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். வருமானம் இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். புதனுக்கு இந்த வீடு நட்பு.

திருமண ஏற்பாட்டில் தாமதம் ஏற்படும். திருமணம் தந்தை வழி அத்தை மூலம் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்காது துணைவருக்கு நோய் தொல்லை இருக்கும்.

ஏழாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டிலேயே சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மீனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது கன்னி புதனுக்கு இது சொந்த வீடு.

திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டு தொழில் ஆரம்பிக்க சரியான தருணம் இது. 

ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். புதனுக்கு இந்த வீடு நட்பு

திருமணம் ஏற்பாடு தடைபட்டு நடைபெறும். திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவர் நடத்தை உங்களை சந்தேகபட வைக்கும். 

ஏழாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமண ஏற்பாடு நடைபெறும். உங்கள் வீட்டில் உள்ள மூத்தவர்கள் திருமண ஏற்பாட்டை கவனிப்பார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும்.

ஏழாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது தனுசு இதன் அதிபதி குரு. புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு நடைபெறும். உங்கள் ஊரில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு அருகில் உங்கள் துணைவர் வருவார். அவரும் நல்ல ஆன்மிக வாதிகளாக இருப்பார். 

ஏழாவது வீட்டு அதிபதி பதினொராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு பதினொராவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமண ஏற்பாடு நண்பர்கள் உறவினர்கள் மூலம் நடைபெறும் உங்களின் துணைவர் மூலம் உங்களுக்கு சொத்துக்கள் சேரும். 

ஏழாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மீனத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. புதனுக்கு இந்த வீடு சமம்.

திருமண ஏற்பாடு செய்ய செலவு செய்ய வேண்டி நிலை ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும் உங்கள் துணைவர் உங்களுக்கு செலவு வைப்பார்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: