வணக்கம் நண்பர்களே அனைத்து நண்பர்களும் போன் செய்து பதிலை தருகிறீர்கள். நன்றி உங்களின் ஆவலை தீர்ப்பதற்க்கும் வழிகளை சொல்லுகிறேன்.
உங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது உங்களின் உரிமை அதில் யாரும் தலையிட வேண்டியதில்லை இன்றைய காலகட்டத்தில் தாய் தந்தையின் பேச்சை கூட கேட்பதில்லை இதில் சோதிடகாரன் பேச்சை மட்டும் கேட்பார்களா?
என் வாழ்க்கை இதில் நான் தான் முடிவு எடுப்பேன் என்று சொல்லுவதே ஏற்றுக்கொள்கிறேன். இன்றைக்கு இருக்கும் விலைவாசிக்கு இருவரும் சேர்ந்து வேலைக்கு சென்றால் தான் அவர்களால் குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். சும்மா ஆன்மீகம் அது இது என்று சொன்னால் உங்களின் வாழ்க்கையை கவனிப்பது யார்?
நீங்கள் வரன் பார்க்கும் போது குறைந்தபட்சம் ஆன்மீக அறிவு இருந்தால் போதும் அதை வைத்து நீங்கள் மேம்படுத்திக்கொள்ளலாம்.
இந்த மாதிரி வரன் பார்க்கமுடியுமா பையன் என் வேலை பார்க்கிறான் அவன் மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிப்பான் என்று தான் நாம் கேட்கமுடியும். மாப்பிள்ளை ஆனமீகத்தில் எந்தளவுக்கு இருக்கிறார் என்று கேட்டால் ஏன் மடம், ஆசிரமம் ஏதாவது கட்ட போகிறாய என்று தான் கேட்பார்கள். இது எல்லாம் ஒத்து வருவாது. அவன் அவன் விதி மாட்டனும்னு இருந்தா மாட்டித்தான் ஆக வேண்டும்.
நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் கணவரை ஆன்மீகவாதியாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆன்மீகம் என்பது ஒரு உணர்வு என்று சொல்லுகிறார்கள் அதற்கான விளக்கம்
காற்று உடம்பில் படும் போது அது உணர்வு ஒரு பொருளை தொடும்போது அது உணர்வு. நீங்கள் கம்யூட்டரில் வேலை செய்கிறீர்கள் அந்த வேலை உடனே கிடைத்ததா நீங்கள் அதனைப்பற்றி படித்து அதில் தேர்ச்சி பெற்று அதில் வேலை செய்கிறீர்கள். கம்யூட்டரில் வேலை செய்யும் போது நாம் கம்யூட்டரில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது இந்த உணர்வை பெறுவதற்க்கு இவ்வளவு காலம் உழைத்து இருக்கிறீர்கள். அதைப்போல் ஆன்மீக உணர்வை பெறுவதற்க்கு நீங்கள் பல காலம் உழைக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும். அப்பொழுது மட்டுமே அதை நீங்கள் அனுபவிக்க முடியும். யாராது ஒரு சிலருக்கு இது எளிதில் நடைபெற்று இருக்கலாம். அது கோடியில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியப்படும். எல்லாருக்கும் நடைபெறாது இது கலியுகம் கஷ்டபடவில்லை என்றால் சாத்தியப்படாது.
ஈசாவாஸ்ய உபநிஷதம்
ஆத்மாவை சார்ந்து இருப்பது கர்மம் என்று சொல்லுவார்கள். உபாசனை என்று ஒன்று இருக்கிறது நீங்கள் கூட பார்த்து இருப்பீர்கள் தேவி உபாசனை என்று சொல்லுவார்கள் ஏதாவது ஒரு தேவியை எடுத்து அதை செய்வது. நமது ஆன்மீக அனுபவங்களில் எழுதுகிறேனே அது தான் அது அதுவும் முக்திக்கு வழி கொடுக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.
நான் சொன்ன நீங்கள் நம்பமாட்டீர்கள் அதற்கு நீங்கள் நிறுபி என்று சொல்லுவீர்கள் ஈசாவாஸ்ய உபநீஷத்தில் சொல்லி உள்ளார் உபாசனையும் ஆத்மா ஞானத்தில் ஒன்றும்போது முக்திக்கு வழி தான் என்று சொல்லிருக்கிறார்.
பல தேவதைகளின் உபாசனையினும் பரமாத்மாவுக்கே அர்ப்பணம் எனக் கருதிச் செய்யப்படுமாயின் செய்பவன் தேவதைகளின் பிரசாதத்தால் படிப்படியாக உயர்நது முடிவில் முத்தி எய்வான் என்று இந்த ஈசாவாஸ்ய உபநிஷத்தில் அருமையாக தன் மகனுக்கு சொல்லுவதை போல் உங்களுக்கு சொல்லிருக்கிறார்.
நீங்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகத்தில் உயர இதைவிட்டால் வேறு வழி இல்லை என்று நினைத்து இதை செய்ய ஆரம்பித்தால் படிப்படியாக உங்களின் ஆன்மிகவாழ்க்கை உயர்வடையும் என்று சொல்லிக்கொள்கிறேன்.
அனைத்து சாமியார் மற்றும் ரிஷிகள் இறந்த பின்பு சொர்க்கம் என்று சொல்லுவார்கள் ஆனால் நான் வாழம் போதே சொர்கத்தில் இருப்பது தான் மிக சிறந்த வாழ்க்கை என்று சொல்லுகிறேன். நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே சொர்க்கமாக மாற்றுங்கள் என்று சொல்லுகிறேன் என்ன மாற்றுவீர்களா நண்பர்களே?
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வணக்கம்,
தாங்கள் கூறுவது சரிதான்...இன்றைய சூழலில் எதையும் எதிர்ப்பார்த்திருக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கின்றேன்...நல்ல அறிவுரைகளுக்கு நன்றி...
நான் சில பெண்களை பார்த்திருக்கிறேன் நல்ல பக்திமிக்கவர்களாகவும்,சாஸ்திர சம்பிரதாயங்களை எல்லாம் முறையாக பின்பற்றுபவர்களாகவும் இருந்தாலும் நல்லவர்களாக வாழ மறந்துவிடுகிறார்கள்...இத்தகைய செயல்கள் நிச்சயம் கடவுளை ஈர்க்காது என்று நினைக்கின்றேன்...இதில் புரியாத புதிர் என்னவென்றால் பொதுவாக ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று தான் எண்ணினேன்...ஆனால் அது தவறு என்று இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது...தங்களது விளக்கங்களுக்கு நன்றி...
Post a Comment