வணக்கம் நண்பர்களே!
வாஸ்து பகுதியில் மனையை தேர்ந்தெடுக்கும் முறையைப்பற்றி பார்க்கலாம். சதுரவடிவமான மனையை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. சதுரவடிவமான மனையில் நல்ல சக்தி கிடைக்கும். மனையில் ஒரு பக்கம் நீண்டு இருந்தாலும் அதனை சதுரவடிமாக மாற்றிய பிறகு நீங்கள் வீடு கட்ட ஆரம்பியுங்கள்.
மனையில் புற்று இருக்கிறதா என்று பாருங்கள் ஒரு சில மனையில் புற்று இருக்கும். அவ்வாறு புற்று இருக்கும் போது அதற்கு நல்ல மஞ்சள் தெளித்து மூன்று நாட்கள் சென்ற பிறகு புற்றை அப்புறப்படுத்திவிட்டு வீடு கட்ட ஆரம்பியுங்கள். சில வீடுகளில் வீட்டிற்க்குள்ளே புற்றை வளர்க்க விட்டுவிடுகிறார்கள். மனையில் புற்று இருக்ககூடாது.
முக்கோண வடிவமான மனையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. முக்கோணத்தில் உள்ள மனையில் வீடு கட்டினால் வீடு தீயினால் பாதிக்கப்படும். முக்கோணம் அக்னி காட்டுவதால் அக்னியின் தன்மை வீட்டில் அதிகம் இருக்கும் என்று சொல்லுவார்கள்.வட்டவடிவத்திலும் மனை இருக்ககூடாது.
மனை மட்டம் ஒரே மாதிரியாக சமமாக இருக்கவேண்டும். ஒரு இடத்தில் உயர்த்தியும் ஒரு இடத்தில் தாழ்த்தியும் இருக்ககூடாது. உயர்த்தியும் தாழ்த்தியும் இருந்தால் வீட்டில் அமைதி இருக்காது.
மலைகள் இருக்கும் இடத்தில் வீட்டு மனை அமைத்தால் தெற்கிலும் மேற்கிலும் மலை இருக்கலாம். கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியில் மலை இருக்ககூடாது.
இப்பொழுது அனைத்து இடத்தையும் வலைத்து போட்டு மனைகள் விற்பனை செய்கிறார்கள். இந்த இடம் முன்காலத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் பார்த்து வாங்க வேண்டும். சுடுகாடு இருந்த இடம் எல்லாம் மனை விற்பனைக்கு வருகிறது அதனால் இதில் விழிப்புணர்வோடு இருந்து மனையை தேர்வு செய்வது நல்லது. விபசாரம் மற்றும் கொலை நடந்த இடத்தையும் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் வாடகை வீட்டில் குடிபோவதாக இருந்தால் அந்த வீட்டில் முன்காலத்தில் விபரீதம் ஏதும் நடந்ததா என்று விசாரித்துவிட்டு செல்வது நல்லது. சில வீடுகளில் துர்மரணம் நடந்திருக்கும் அப்படி நடந்திருக்கும் வீட்டில் நீங்கள் குடிச்செல்வது நல்லது அல்ல. அதனாலும் உங்களுக்கு பிரச்சினை வரும்.
பரிகாரம்
உங்கள் வீட்டிற்க்கு நல்லசக்தி கிடைக்கவேண்டும். உங்களுக்கும் நல்லது நடக்கவேண்டும் அதனால் நீங்கள் நல்ல ஆன்மீகவாதிகளை சந்தித்தால் அவர்களை உங்களின் வீட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள். உங்களின் வீட்டில் அவர்களின் கால் தடம் படும்போது பல புண்ணியங்களை உங்களின் மனை பெறும். எப்பேர்பட்ட பாவங்களையும் தோஷத்தையும் தீர்க்கும் வலிமை அவர்களுக்கு உண்டு என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
"OM SRI SAI RAM"
வருக Raji வணக்கம் தங்களின் மந்திர வார்த்தைக்கு நன்றி. Sairam உங்களின் வாழ்க்கைக்கு துணை நிற்பார்.
thanks
Nice info. Thanks sir..
Post a Comment