வணக்கம் நண்பர்களே !
பழைய பதிவுகளில் மூச்சு பயிற்சியைப்பற்றி சொல்லிருந்தேன். இதனை பல நண்பர்கள் செய்துக்கொண்டுருக்கிறார்கள். அவர்கள் அடுத்தது என்ன என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களிடம் இருங்கள் பதிவில் சொல்லுகிறேன் என்று சொல்லிவைத்தேன். பிராணாயாமத்திற்க்கு முன் மந்திர ஜெபத்தை கொடுத்துவிட வேண்டும். பின்பு படிப்படியாக அனைத்து பயிற்சியும் கொடுக்கலாம் என்று நினைத்ததால் இதனைப்பற்றி சொல்லவில்லை. இப்பொழுது பல நண்பர்கள் பயிற்சியை எடுப்பதால் இதனைப்பற்றி சொல்லிவிடுகிறேன்.
நாடிசுத்தியைப் பற்றி ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம். இனி பிராணாயாமம் செய்துவதைப்பற்றி பார்க்கலாம்.
பெருவிரலால் வலது மூக்கை(நாசியை) அடைத்துக்கொண்டு இடது மூக்கின்(நாசி) வழியாக மூச்சை நன்றாக உள்ளே இழுங்கள்.
இரு நாசியையும் அடைத்துவிடுங்கள் கையை வைத்தே அடக்க பழக்கிக்கொள்ளுங்கள். மூச்சு காற்றை உள்ளேயே நிறுத்திவைக்கவும். இது எவ்வளவு நேரம் என்றால் முதலில் உங்களால் முடிந்தளவுக்கு செய்யலாம். ஒரு சிலர் மந்திரங்களை மனதில் நினைப்பார்கள். முதலில் ஐந்து தடவை ஒரு மந்திரத்தை நினைத்துக்கொள்ளுங்கள். எந்த மந்திரம் என்றால் ஓம் என்ற மந்திரத்தை பயன்படுத்தலாம். மூச்சை அடக்கும் நேரத்தில் ஐந்து தடவை மனதில் ஓம் எனறு சொல்லிவிட்டு. மூச்சுகாற்றை வெளியில் விடுங்கள்.
மூச்சு காற்றை வெளியில் விடும்போது மெதுவாக வெளியில் விடு்ங்கள். திடிர் என்று அவசரபட்டு வெளியில் விட்டால் ஆத்மாவும் வெளியில் சென்றுவிடும். பொறுமையாக வெளியில் விடுங்கள். அடிவயிற்றை உள்ளிழுத்தப்படி மூச்சு காற்றை வெளியில் விடவும்.
முதலில் ஐந்து தடவை ஓம் என்ற மந்திரத்தை உள்ளே நிறுத்தினாலே போதும். பிறகு படிப்படியாக இந்த எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளுங்கள். இதனை எந்தளவு செய்கின்றீர்களோ அந்தளவுக்கு உங்களின் ஆயுள் அதிகரிக்கும். உங்கள் ஆத்மாவின் பலன் அதிகரிக்கும்.
காயத்ரி மந்திரம் செய்பவர்கள் எல்லாம் இந்த பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். நான் உங்களை சோதனை செய்வேன். காயத்ரி மந்திரம் செய்யாதவர்களும் இதனை செய்யலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடரட்டும் ..........!!!!!!
//* dreamwave said...
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்கள் பணி தொடரட்டும் ..........!!!!!! *//
நன்றி நல்வாழ்த்துக்கள் தங்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுங்கள்.
"விஜய வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" Rajes Sir.
வணக்கம் நல்வாழ்த்துக்கள் raji
Post a Comment