வணக்கம்!
வாஸ்து சாஸ்திரத்தைப்பற்றி சொல்லுவதற்க்கு கடந்த ஒரு நாள் முன்பு ஒரு சம்பவம் நடந்தது. அதனை உங்களிடம் சொல்லுகிறேன்.
எந்த ஒரு சாஸ்திரமும் நமக்கு நல்லதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும் அப்படி இல்லை என்றால் அதனை விட்டுவிடவேண்டும். அனைத்தும் நாம் வாழ்வதற்க்கு தானே தவிர சாஸ்திரத்திற்க்காக நாம் வாழக்கூடாது என்பதை நான் அடிக்கடி சொல்லுவது உண்டு.
பழையகாலத்தில் கிராமபுறங்களில் எல்லாம் அடுப்பை ஈசானிய மூலையில் அமைத்து இருப்பார்கள். தற்பொழுது வாஸ்து என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அனைத்தையும் அக்னி மூலையில் அமைத்துவிட்டார்கள்.
பழைய காலத்தில் உள்ளவர்கள் நன்றாகதானே வாழ்ந்தார்கள். இன்றைய காலத்தில் பொறாமையால் மனிதன் சாகுறான். இன்றைய காலத்தில் வாஸ்துவை பிடித்துக்கொண்டு பல விசயங்களை மாற்றிவிட்டார்கள்.
வாஸ்துபடி அமைக்கிறேன் என்று பல வீட்டை இடித்து கூட நம்ம ஆட்கள் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இது எல்லாம் தேவையில்லை. ஒரளவு பார்க்கவேண்டியது தான். அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment