Followers

Saturday, February 6, 2016

பாக்கிய லாபம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானமும் லாபஸ்தானமும் சம்பந்தப்பட்டால் என்ன பலனை தரும் என்பதை பார்க்கலாம். லாபஸ்தானம் என்றவுடன் நாம் பணத்தை தான் முதலில் நினைப்போம். பணம் ஒரு கருத்தாக இருந்தாலும் ஒவ்வொருவரின் குடும்பமும் நல்ல முறையில் இருந்தாலே அது லாபமாக தான் இருக்கும்.

விஞ்ஞானி ராக்கெட் ஏவுவதை விட ஒரு குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு வருவது என்பது அதனைவிட சாமர்த்தியம் வேண்டும். கொஞ்சம் தவறு நடந்துவிட்டாலும் குடும்பம் பிரச்சினையை சந்தித்துவிடும்.

குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களையும் ஒன்று சேர்த்து வாழ்க்கையை நடத்துவது என்பது ஒரு சாதாரணமான காரியம் கிடையாது. இன்றைய காலத்தில் பல குடும்பங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கின்றது. அவர்களை எல்லாம் சந்தித்து அவர்களின் அனுபவத்தை கேட்டு தான் இதனை எல்லாம் சொல்லுகிறேன்.

குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒத்துசைத்து நடத்தினால் பிரச்சினை வருவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையாக இருந்தால் ஒன்றும் சொல்லுவதற்க்கில்லை. இதனை எல்லாம் அனுபவமாக பார்க்கும்பொழுது தான் உங்களுக்கு புரியும்.

பல நண்பர்களுக்கு இது அனுபவமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு இன்னும் வராமல் இருக்கலாம். பல வருடங்கள் எந்த வித சிக்கலும் இல்லாமல் ஒரு தலைமுறையை கடப்பதே நாம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த பாக்கியமாக தான் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: