Followers

Saturday, February 13, 2016

அண்ணன் என்னடா


வணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி லாபஸ்தானஅதிபதியோடு தொடர்புக்கொள்ளும்பொழுது என்ன மாதிரி பலனை தரும் என்பதை பார்த்து வருகிறோம். லாப ஸ்தானம் என்பது மூத்த சகோதர சகோதரிகளை காட்டும் இடமும் என்பதால் மூத்த சகோதர அல்லது சகோதரிகள் வழியாக நல்லது நடக்கும் என்பதை சொல்லலாம்.

இன்றைய காலத்தில் ஒரு சிலருக்கு அண்ணன் நல்லபடியாக அமைந்துவிடுவது உண்டு. மீதி உள்ள அனைவருக்கும் அண்ணன் என்பவர் சொத்தை அதிகம் ஆட்டை போட்டவர்களாக தான் இருப்பார்கள்.

பல குடும்பங்களை நான் பார்த்து இருக்கிறேன். அண்ணன் குடும்பத்திற்க்கு மாடாக உழைத்து போடுவார்கள். தம்பிக்கு ஒரு திருமணம் நடத்தகூட அண்ணன் நினைப்பதில்லை. அப்படியே திருமணம் நடந்தாலும் கூட தம்பி குடும்பத்தை பார்க்க கூட அண்ணன் நினைப்பதில்லை.

வேலையை வாங்கிக்கொண்டு அவர் வேலையை பார்த்துக்கொண்டு சென்றுவிடுவார். அண்ணன் ஒரு சுயநலக்காரர்களாகவே இருக்கிறார்கள். முக்கால்வாசி பேருக்கு சரியில்லை என்று சொல்லலாம்.

அண்ணன் குழந்தையை தம்பி அப்படி ஒரு நல்லவிதமாக வளர்பார். அவர் குழந்தையை தூக்கி கொஞ்சகூட ஆள் இருக்காது. அண்ணன் பிள்ளையை வளர்ப்பதை விட தென்னம்பிள்ளையை வளர்க்கலாம் என்று சும்மாவா சொன்னார்கள்.

உங்களின் பாக்கியாதிபதி லாபஸ்தான அதிபதியோடு சம்பந்தம் இருக்கும்பொழுது அண்ணன் ஒரு நல்ல வழிகாட்டியாக உங்களுக்கு தோள்கொடுப்பவர்களாக இருப்பார். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: