வணக்கம் !
தீர்வு பகுதியில் இதுவரை நாம் பார்த்தது எல்லாம் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டதை பார்த்து வருகிறோம். அதனோடு உங்களின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தாலும் அதில் இருந்து பல விசயங்கள் உங்களுக்கு பிடிபடும்.
உங்களின் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் எடுத்து பார்த்தால் அதில் ஏதாவது ஒரு தவறு நமக்கு பிடிபடும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியாக தான் ஜாதகம் அமையும். அவர்களின் குடும்பத்தில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜாதகமும் வருகிறது.
ஒரு கிரகமும் மட்டும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அதிகப்படியான பிரச்சினையை கொடுக்கும் கிரகமாக மாறி அவர்களின் குடும்பத்தை போட்டு தாக்கிக்கொண்டிருக்கும். அதற்கு மட்டும் நீங்கள் பரிகாரம் செய்துக்கொண்டால் போதும் சரி அதற்கு பரிகாரம் செய்யமுடியாது என்று இருந்தால் அதனை காட்டும் விசயத்தில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.
சம்பந்தப்பட்ட கிரகம் காட்டும் அனைத்து விசயத்தையும் தவிர்த்துவிடவேண்டும். அதே நேரத்தில் அதுவாகே அந்த அமைப்பு சம்பந்தப்பட்டது வரும்பொழுது அமைதியாக இருந்துவிடுவது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment