வணக்கம்!
பாக்கியஸ்தானத்தை பொறுத்தவரை ஒன்பதில் ராகு இருந்தால் பித்ருதோஷம் என்று சொல்லுவார்கள். அதே நேரத்தில் ஒன்பதில் அமையும் ராகு நல்ல வலுவாக அமைந்துவிட்டால் அந்த நபருக்கு அனைத்தும் நல்லதாகவே அமையும்.
ஒரு சில காலங்கள் வரை மிகவும் கஷ்டப்பட்டுவிட்டு அதன் பிறகு மிகவும் ஒரு நல்லதோறு வாழ்க்கையை வாழ்வார்கள். முப்பது வயது வரை கடுமையான கஷ்டம் இருக்கும் அதன் பிறகு ஒரளவு தெளிவு ஏற்படும். முப்பந்தைந்து வயதை கடந்தவுடன் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ ஆரம்பிப்பார்கள்.
ஒரு சிலருக்கு அதிகபட்சமான வாழ்வு கூட அமையும். ராகு பலம் பெற்றுவிட்டால் அந்த நபருக்கு ஆண்குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் இருக்கும். பொதுவாக ஒன்பதில் ராகு இருக்கும் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன். வலுவாக அமைந்த ராகு ஆண் குழந்தையை கொடுக்கிறது.
ராகு ஒன்பதில் அமைந்து இருப்பவர்களுக்கு அதிகமான வெளிஇனத்தவர் தொடர்பு இருக்கும். வெளிநாடுகளில் கூட தொடர்பு வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் உதவி செய்து அதன் வழியாக முன்னேற்றம் அடைந்தவர்களாக கூட இருப்பார்கள்.
ராகு கிரகம் மிக வலிமையான ஒரு கிரகம். ஜாதகத்தில் ராகு வலிமையாக அமைந்த நபர்கள் எதையும் துணிந்து செய்பவர்களாக இருப்பார்கள். வெற்றி மேல் வெற்றியாக குவிக்கும் நபர்களுக்கு எல்லாம் ராகு பலம் பெற்றவர்கள்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment