வணக்கம்!
ஜாதகம் எப்படி இருந்தாலும் உங்களின் தந்தையாரின் செயலப்பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள். தந்தையாரிடம் உள்ள தவறான செயலால் யாராவது பாதிக்கப்பட்டார்களாக என்பதை பற்றியும் செய்தியை சேகரித்து பார்த்தால் அதனால் பிரச்சினை வந்திருக்கும் என்பதை தெரியும்.
ஒரு சிலருக்கு அவர்களின் தாத்தா ஏதாவது பிரச்சினை செய்திருந்தால் கூட ஒரு சிலரின் வாழ்க்கை முன்னேற்றம் இல்லாமல் இருக்கும். தற்பொழுது தான் ஒரளவு நவீன வசதி எல்லாம் வந்து தவறுகள் செய்யாமல் இருக்கின்றனர். அந்த காலத்தில் ஒரு தெருவில் நடந்த சண்டையை அடுத்த தெருவில் உள்ளவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும். தவறு நிறைய நடப்பதற்க்கு வாய்ப்பு இருக்கும்.
ஏதாவது பிரச்சினை செய்திருந்தால் வெளியில் தெரியாமல் இருந்திருக்கும் நன்றாக விசாரித்து பார்த்தால் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள்.
இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் உண்மையான பிரச்சினை இது தான் என்பதை அறிந்துக்கொண்டால் அதற்கு தீர்வை நாம் எளிதில் கண்டுபிடித்து ஏதாவது செய்து நமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளலாம்.
மேலே சொன்ன விசயங்களை நீங்கள் படிக்கும்பொழுது இது எல்லாம் சரிப்பட்டுவருமா என்று நினைக்கலாம். உண்மை சொன்னால் நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று இருந்த இடமே தெரியாமல் பாேனதற்க்கு காரணம் அவர்களின் குடும்பத்தில் இப்படி ஏதாவது ஒரு தவறுகளை செய்த சாபத்தால் வந்த வினையாக இருக்கின்றது. எதற்கும் இதனை நீங்கள் ஆராய்ந்தால் ஒரளவு உங்களுக்கு பிடிபடும் என்பதற்க்காக சொன்னேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment