வணக்கம்!
உங்களுக்கு கடுமையான பிரச்சினை இருக்கின்றது. என்னால் எழுவதற்க்கே முடியவில்லை என்று நினைப்பவர்கள் தங்களுடைய ஜாதகத்தை எடுத்து அதில் மூன்றாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீடுகளில் ராகு கேது சம்பந்தப்படுகிறதா என்பதை பாருங்கள்.
ராகு கேது கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்கும். பித்ருதோஷம் இருப்பவர்களுக்கு வாழ்வில் போராட்டம் அதிகமாக இருக்கும். போராடியே தன்னுடைய வாழ்க்கையை நிர்ணிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வு என்பது பிற்பகுதியில் தான் அதிகமாக இருக்கும். முப்பது வயதிற்க்கு பிறகு தான் நல்ல வாழ்க்கை அமையும்.
பித்ருதோஷம் என்பதை நீங்கள் தெரிந்துக்கொண்டால் நீங்களாவே அதிகமான கோவிலுக்கு சென்று வாருங்கள். புண்ணிய நதியில் நீராடிவிட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு வழி கிடைக்கும்.
தற்பொழுது பித்ருதோஷம் இல்லாதவர்களும் தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று கோவிலுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். பித்ருதோஷம் இருப்பவர்கள் அதிகமாக கோவிலுக்கு செல்லவேண்டும் இது தான் இவர்களுக்கு தீர்வு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment